OUR CLIENTS
திருவள்ளூர், வேலூரில் ஜி.எஸ்.டி., உதவி மையம் மத்திய வணிக வரி துறை இணை ஆணையர்!
திருவள்ளூர், வேலூரில் ஜி.எஸ்.டி., உதவி மையம் மத்திய வணிக வரி துறை இணை ஆணையர்! Posted on 20-Dec-2018 திருவள்ளூர், வேலூரில் ஜி.எஸ்.டி., உதவி மையம் மத்திய வணிக வரி துறை இணை ஆணையர்!

திருவள்ளூர், டிச.20- 

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஜி.எஸ்.டி., குறித்து தகவல் அறிய திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் உதவி மையங்களில் திறக்கப்பட்டுள்ளது என மத்திய வணிக வரி துறை இணை ஆணையர் கூறினார்.
திருவள்ளூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஜி.எஸ்.டி., தொடர்பாக ஒருநாள் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்தார். மத்திய வணிகவரி துறை இணை ஆணையர் (ஜி.எஸ்.டி.,) மானசா கங்கோத்ரி கட்டா பேசியதாவது:குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஜி.எஸ்.டி., தொடர்பான அனைத்து விஷயங்களிலும் உதவி செய்ய மத்திய கலால் துறை திருவள்ளுர், வேலூர் மாவட்டங்களில் ஜி.எஸ்.டி., உதவி மையங்களை அமைத்துள்ளன.வரி செலுத்துதல், வரிக்கான கடன் கிடைக்க செய்தல், ஜி.எஸ்.டி., வரியில் திரும்பக் கோருவதற்கான முறைகள் ஆகியவற்றில் நுட்பமானப் பிரச்னைகளை அறிவதற்கு இந்த மையங்களின் அதிகாரிகள் உதவி செய்வர். மேலும் விபரங்களுக்கு தொலைபேசி 044- - 27661360, 26215765 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மத்திய வணிகவரி துறை துணை ஆணையர்மோசுகந்தி கங்காதர், மாநில வணிக வரி இணை ஆணையர் சரஸ்வதி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

Label