OUR CLIENTS
ஜோலார்பேட்டை பேருந்து நிலையத்தில் கழிப்பறை இல்லை!
ஜோலார்பேட்டை பேருந்து நிலையத்தில் கழிப்பறை இல்லை! Posted on 20-Dec-2018 ஜோலார்பேட்டை பேருந்து  நிலையத்தில் கழிப்பறை இல்லை!

ஜேலார்பேட்டை, டிச.20-

 தமிழகத்தில் முக்கியமான ரயில்வே ஸ்டேஷன் ஜோலார்பேட்டை என்பதை அனைவரும் நன்கு அறிந்ததே. அத்தகைய சிறப்பு வாய்ந்த ஜோலார்பேட்டையில் பேருந்து நிறுத்தம் சரியாக இல்லை.

அதிலும் குறிப்பாக பேருந்து நிலையத்தில் கழிப்பறை கிடையாது. ஆண்கள் நிலைமை ஓரளவுக்கு பரவாயில்லை. பெண்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. வெளியூர்கள் மற்றும் வேறு மாநிலங்களில் இருந்து வருவோர் சிறுநீர் கழிக்கவோ, மலஜலம் கழிக்கவோ கழிப்பறை வசதியில்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கழிவறை இல்லாமல் ஒரு பேருந்து நிலையம் செயல்படுவது வேலூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை மட்டுமாககத்தான் இருக்கும். 
எங்கு சென்றாலும் 24 மணி நேரமும் இயங்கும் அளவில் கழிப்பறைகள் கட்டப்பட்டு நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் பரமாமரித்து வருகின்றன. ஆனால் இப்போது ஜேலார்பேட்டையை பார்த்தால் மிகவும் பரிதாபமாக உள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கழிப்பறை இல்லாமல் பொதுமக்கள், பயணிகள் மரண அவதியடைகின்றனர். எவ்வளவு நேரம் அடக்கி வைக்க முடியும் இயற்கை உபாதைகளை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 
பல்வேறு வரிகளை வசூல் செய்யும் உள்ளாட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதியான கழிப்பறை அமைத்து தராமல் காலம் கடத்தி வருவது ஏற்புடையது அல்ல. ஆதலால் விரைவில் ஜோலார்பேட்டையில் கழிப்பறை கட்ட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது. ஆதலால் எப்போது இதற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று மக்கள் ஏக்கத்துடன் காத்துள்ளனர். உள்ளாட்சித்துறை அமைச்சரும், வேலூர் மாவட்ட நிர்வாகமும்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Label