OUR CLIENTS
பேருந்து வசதியே இல்லாததால் தொடர் அவதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடக்கும் அவலம்!
பேருந்து வசதியே இல்லாததால் தொடர் அவதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடக்கும் அவலம்! Posted on 20-Dec-2018 பேருந்து வசதியே இல்லாததால் தொடர் அவதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடக்கும் அவலம்!

பொன்னேரி, டிச.20-

பேருந்து வசதி இல்லா ததால், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. 
தினந்தோரும்
4கி.மீ., நடைபயணம் மேற்கொள்வதால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கல்வியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி-பெரும்பேடு சாலையில் இருந்து பிரியும் சாலையில் தேவராஞ்சேரி, ஏருசிவன், மடிமைகண்டிகை உட்பட, 13 கிராமங்கள் உள்ளன.இங்குள்ள மாணவர்கள் 8ம் வகுப்பிற்கு பின் உயர் கல்வி படிக்க பொன்னேரிக்கு செல்ல வேண்டும். இந்த வழித்தடத்தில் பேருந்து வசதியில் லாததால் இவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.கரடு முரடாகவும், புதர் மண்டியும் கிடக்கும் கிராம சாலைகளில் பெரும் சிரமத்திற்கு இடையே மாணவர்கள் செல்கின்றனர்.
பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்புவதற்குள் இருண்டு விடுவதால் பெற்றோர் அச்சப் படுகின்றனர். பெண் குழந்தைகள் மீது தொடரும் பாலியல் குற்றங்களை எண்ணி பெண் குழந்தைகளை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பலாமா, வேண்டாமா என யோசிக்கின்றனர். மேற்கண்ட கிராமங்களில் 8ம் வகுப்பு முடித்தோரில் பெரும்பான்மையான மாணவர்களுக்கு உயர் கல்வி எட்டாக்கனியாக உள்ளது. 
மருத்துவம் மற்றும் பிற அன்றாட தேவைகளுக்கும் பொதுமக்கள் நடைபயணம் தான். கடந்த 1989ம் ஆண்டு நடந்த, எம்.பி., தேர்தலின் போது தேர்தல் புறக்கணிப்பில் கிராம மக்கள் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் இரண்டு மாதங்களில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. நாங்கள் அளித்த மனுக்களையும் அதிகாரிகள் கவனிப்பதில்லை என கிராமமக்கள் கூறுகின்றனர்.விஷ ஜந்துக்களால் அபாயம்பள்ளி செல்வதற்காக காலையில் 7:00 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு 4 கி.மீ., நடந்து சென்று, 9:00 மணிக்கு பள்ளியை அடைகிறோம். நடந்து செல்லும் வயல்வெளியில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உள்ளன. 
மாலையில் வீடு திரும்பும் போது பயமாக இருக்கிறது. தினமும் மூன்று மணி நேரம் நடப்பதால் உடல் சோர்ந்து சரியாக படிக்க முடியவில்லை. பள்ளிக்கு செல்ல வேண்டாம் என பெற்றோர் அறிவுறுத்துகின்றனர். பள்ளி மாணவர்கள் ஏருசிவன், மடிமை கண்டிகைகட்சி கூட்டத்திற்கு பேருந்து பேருந்து வசதி கேட்டு பல ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். அரசு எங்கள் கிராமங்களை புறக்கணித்து வருகிறது. பேருந்து வந்து செல்ல சாலை போதுமான இல்லை என கூறுகின்றனர். 
ஆனால் ஆளுங்கட்சி கூட்டங்களுக்கு கிராம மக்களை பேருந்துகளில் தான் அழைத்துச் செல்கின்றனர். அப்போது மட்டும் பேருந்துகள் எப்படி வந்து செல்கின்றன.  மடிமைகண்டிகை ஆய்வு செய்யப்படும் புதிய வழித்தடம் என்பதால் கிராம மக்களின் கோரிக்கை குறித்து காஞ்சிபுரம் தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்கப்படும். பின் மேற்கண்ட வழித்தடத்தை ஆய்வு செய்து அறிக்கை தருவோம். புதிய பேருந்து இயக்க அனுமதி கிடைத்தால் மட்டுமே பொதுமக்களின் கோரிக்கை நிறைவேறும் என்று பொன்னேரி  பணிமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Label