OUR CLIENTS
ஜிசாட் 7ஏ செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்.எல்.வி எஃப்-11 ராக்கெட்
ஜிசாட் 7ஏ செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்.எல்.வி எஃப்-11 ராக்கெட் Posted on 20-Dec-2018 ஜிசாட் 7ஏ செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்.எல்.வி எஃப்-11 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா, டிச.20-

இஸ்ரோ தயாரித்த தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட் 7ஏ செயற்கைகோளுடன் ஜிஎஸ்.எல்.வி எஃப்-11 ராக்கெட் நேற்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த பயணத்திற்கான கவுண்டவுன் மதியம் 2.10 மணிக்கு துவங்கிய நிலையில் நேற்று மாலை 4.10 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் பாயந்தது.
மூன்று நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி- எப்11 ராக்கெட்டின் முதல்நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் உள்ளது. 3-வது நிலையில் இந்திய விஞ்ஞானிகளால் முழுவதும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.எல்.வி-எப்11 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஜிசாட் 7ஏ செயற்கைகோள் 2,250 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 8 வருடங்கள். இந்த செயற்கைகோள் இந்திய துணைகண்ட பகுதியில் கு - பேண்ட் மூலம் தொடர்பு கொள்ள உதவும்.
இந்திய விமானப்படையின் செயல்பாடுகளுக்கு உதவும் நோக்கத்தில் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. விமானங்களுக்கு இடையேயும் கட்டுப்பாட்டு மையங்களுக்கு இடையிலும் தகவல் போக்குவரத்துக்கு ஜிசாட் 7ஏ உதவும். ஜிஎஸ்.எல்.வி எஃப்-11 ராக்கெட்டில் கொண்டு செல்லப்பட்ட ஜிசாட் 7ஏ செயற்கைகோள் வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் கொண்ட சுற்றுப்பாதையில் ஜிசாட் 7ஏ செயற்கைகோள் பூமியை சுற்றி வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஜிஎஸ்.எல்.வி எஃப்-11 ராக்கெட்டின் பயணம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் உட்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் இஸ்ரோ சார்பில் கடந்த 35 நாட்களில் மூன்றாவது செயற்கைகோள் ஏவப்பட்டுள்ளது. இது இஸ்ரோவின் மிக பெரும் சாதனை என சிவன் தெரிவித்தார்.  

Label