OUR CLIENTS
‘பாகுபலி’ பட பாணியில் வெள்ளத்தில் மூழ்கிய மகனை தூக்கி பிடித்து காப்பாற்றிய தாய் தண்ணீரில் மூழ்கிய சோகம்
‘பாகுபலி’ பட பாணியில் வெள்ளத்தில் மூழ்கிய மகனை தூக்கி பிடித்து காப்பாற்றிய தாய் தண்ணீரில் மூழ்கிய சோகம் Posted on 29-Aug-2016 ‘பாகுபலி’ பட பாணியில் வெள்ளத்தில் மூழ்கிய மகனை தூக்கி பிடித்து காப்பாற்றிய தாய் தண்ணீரில் மூழ்கிய சோகம்

லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்காவில் கொலாரடாவில் லேக்வுட் பகுதியை சேர்ந்தவர் செல்சி ரூஸ்செல் (33), இவர் தனது 2 வயது மகன் மற்றும் குடும்பத்தினருடன் உத்தாவில் உள்ள போவெல் ஏரிக்கு சுற்றுலா சென்றார். அங்கு சிறிய அளவில் இல்லத்துடன் கூடிய படகுகள் விடப்பட்டுள்ளன. அதில் ஒரு படகில் செல்சி ரூஸ்செல் தனது மகனுடன் சவாரி செய்தார்.


அப்போது அவரது மகன் திடீரென படகின் மேல் பகுதிக்கு சென்றான். திடீரென எதிர்பாராத விதமாக ஏரி தண்ணீருக்குள் விழுந்து விட்டான்.

இதை கவனித்த செல்சி ரூஸ்செல்சின் தாய் மனம் பதறி துடித்தது. அவர் தனது உயிரை பாதுகாக்கும் லைப் ஜாக்கெட் (பாதுகாப்பு கவசம்) எதுவும் அணிந்திருக்கவில்லை. இருந்தாலும் ஏரி தண்ணீருக்குள் குதித்து தண்ணீரில் தத்தளித்த தனது மகனை காப்பாற்றினார்.

ஆனால் அவர் குதித்த இடத்தில் தலைக்கு மேல் உடல் முழுவதும் மூழ்கும் அளவுக்கு அதிகமான தண்ணீர் இருந்தது. இருந்தும் மகனை காப்பாற்ற அவனை தனது கையில் உயரமாக தாங்கி பிடித்தபடியே தண்ணீரில் மூழ்கினார்.

இதற்கிடையே மற்றொரு படகில் இருந்த அவரது குடும்பத்தினர் விரைந்து வந்து அவரது கையில் இருந்த 2 வயது சிறுவனை உயிருடன் மீட்டனர். ஆனால் ரூஸ்செல் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்போது சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பாக ஓடி வசூல் குவித்த ‘பாகுபலி’ படத்தில் குழந்தையை கொல்ல துடிக்கும் அரசன் நாசரிடம் இருந்து அவரது மனைவியாக நடிக்கும் ராணி ரம்யா கிருஷ்ணன் குழந்தையை காப்பாற்றி வந்து சீறிப்பாய்ந்து கரை புரண்டோடும் ஆற்று வெள்ளத்தை கடக்க முயற்சி செய்வார். ஆனால் வெள்ளத்தில் மூழ்கி உயிர்விடும் அவர் குழந்தையை மட்டும் தனது கையில் தாங்கி பிடித்தபடி காப்பாற்றி விட்டு உயிர் துறப்பார். அந்த காட்சியை பிரதிபலிப்பதாக அமைந்தது இந்த சம்பவம்.

Label