OUR CLIENTS
டி.ஜி.பி ராஜேந்திரன் பணி நீட்டிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கு... உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
டி.ஜி.பி ராஜேந்திரன் பணி நீட்டிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கு... உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு Posted on 20-Dec-2018 டி.ஜி.பி ராஜேந்திரன் பணி நீட்டிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கு... உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தமிழக டி.ஜி.பி., ராஜேந்திரன் பணிநீட்டிப்பை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றுள்sதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. டி.கே.ராஜேந்திரன் மீதான லஞ்ச புகார் குறித்த வருமான வரித்துறையின் கடிதம் கிடைக்கவில்லை என அப்போதைய தமிழக தலைமை செயலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவ்வாறு மறைக்கப்பட்ட ஆவணங்கள் சசிகலா அறையில் வருமான வரித்துறை சோதனையின்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பு நியமனத்தை சட்டவிரோதம் என அறிவிக்கவும், குட்கா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு பிரிவை அமைத்து, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தவும், 2013 தமிழ்நாடு காவலர் சட்ட விதிப்படி புதிதாக டி.ஜி.பி.யை நியமிக்கவும் உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது.
இன்றைய விசாரணையின் போது காணாமல் போனதாக கூறப்பட்ட ஆவணங்கள் எந்த பொறுப்பிலும், பதவியிலும் இல்லாத சசிகலாவின் அறையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக வருமான வரி புலனாய்வுத்துறை இயக்குநரே அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள், சசிகலா, முன்னாள் தலைமை செயலர் ராமமோகன்ராவ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை  ஜனவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Label