OUR CLIENTS
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும்: அமைச்சர் உதயகுமார்
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும்: அமைச்சர் உதயகுமார் Posted on 20-Dec-2018 மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும்: அமைச்சர் உதயகுமார்

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் "எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க வேண்டும் என 2014-இல் மத்திய அரசுக்கு,  அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். அதன் பிறகு நீண்ட இழுபறிக்கு பிறகு நீதிமன்றம் வரை சென்ற பின்னர் ஒருவழியாக கடந்த ஜூன் 18 ஆம் தேதி புதுதில்லியில் நடந்த மத்திய சுகாதாரத் துறையின் ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை தோப்பூரில் "எய்ம்ஸ்' மருத்துவமனையை அமைக்க முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. 
அப்போது, 5 நிபந்தனைகளை தமிழக அரசு நிறைவேற்றி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. "எய்ம்ஸ்' மருத்துவமனை அமையும் இடத்தில் நான்கு வழிச் சாலை அமைத்து, அதை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும். அந்த இடத்தில் உள்ள மின்கம்பங்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.  20 மெகாவாட் மின்வசதி 2 வழித் தடங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும். போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். 
தோப்பூர் பகுதியில் 300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைக்க வேண்டும். அந்த இடத்தின் வழியே குழாய் பதித்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் தடை இல்லாச் சான்று பெற வேண்டும் என 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.  இவற்றை நிறைவேற்றுவதற்கான ஒப்புதலுடன் தமிழக அரசு, மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பியது. 
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மதுரையில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  மருத்துவமனைக்கான  கட்டுமானப் பணிகள் 45 மாதங்களில் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார்,
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும். அம்மா பேரவை சார்பாக பிரதமர், முதல்வர், துணை முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம். தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டியிருந்தால், ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என எனக்குள்ளே கேள்வி கேட்டுள்ளேன்.
கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய குழு அறிக்கை தாக்கல் செய்த பின்னர், மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து தேவையான நிவாரண நிதி பெறப்படும் என்றார். 

Label