OUR CLIENTS
ரேஷன் கடைகளில் சிசிடிவி பொருத்த கூட்டுறவுத் துறைக்கு பரிந்துரை: உயர் நீதிமன்றம் உத்தரவு
ரேஷன் கடைகளில் சிசிடிவி பொருத்த கூட்டுறவுத் துறைக்கு பரிந்துரை: உயர் நீதிமன்றம் உத்தரவு Posted on 20-Dec-2018 ரேஷன் கடைகளில் சிசிடிவி பொருத்த கூட்டுறவுத் துறைக்கு பரிந்துரை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்துமாறு பரிந்துரையை கூட்டுறவுத் துறைக்கு அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 வாரத்தில் கூட்டுறவுத் துறைக்கு பரிந்துரை அனுப்பி, இந்த திட்டத்தை அரசு எப்படி செயல்படுத்தப் போகிறது என்பதை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்பதை தமிழக அரசு வரும் ஜனவரி 10ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ரேஷன் கடைகளுக்கு பொருட்களைக் கொண்டு வரும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவியை பொருத்தலாமா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வாதத்தின்போது, அனைத்து ரேஷன் கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த அதிக செலவாகும் என்று தமிழக அரசின் கூடுதல் பதிவாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நியாய விலைக் கடையின் பொருட்களை முறைகேடாக விற்றதாக பணி நீக்கம் செய்யப்பட்ட, ரேஷன் கடை ஊழியர் கீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

Label