OUR CLIENTS
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து முதலிடம்
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து முதலிடம் Posted on 20-Dec-2018 ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து முதலிடம்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் 934 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 915 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 892 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
புஜாரா நான்காவது இடம் பிடித்துள்ளார். டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தென்னாப்பிரிக்க வீரர் ககிசோ ரபடா முதல் இடத்தில் உள்ளார். இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களில் உள்ளனர்.

Label