OUR CLIENTS
தயாரிப்பாளர் சங்க அதிருப்தி - சங்க உறுப்பினர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு
தயாரிப்பாளர் சங்க அதிருப்தி - சங்க உறுப்பினர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு Posted on 20-Dec-2018 தயாரிப்பாளர் சங்க அதிருப்தி - சங்க உறுப்பினர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு

விஷாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள், பாரதிராஜா தலைமையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்டோர் தலைமைச் செயலகம் வந்தனர். முதலில் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவையும் சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து அவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். முதலமைச்சரிடம் தங்களது கோரிக்கைகளையும் குறைகளையும் மனுவாக அளித்ததாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
சங்கம் என்றிருந்தால் அதற்கென விதிமுறைகள் உள்ளன என்றும், ஆனால் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவை கூட்டி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் பாரதிராஜா கூறினார். கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டியது தலைமையின் பொறுப்பு என்றும், 7 கோடி ரூபாய் நிதி குறித்து கேட்டால் பதில் சொல்லவில்லை என்றால் எப்படி? என்றும் அவர் வினவினார். தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று குற்றம்சாட்டிய பாரதிராஜா, 
வேறொரு அலுவலகம் யாரைக் கேட்டு வாடகைக்கு எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கும் பதில் இல்லை என்றார்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு இளையராஜா 50 கோடி ரூபாய் தரவேண்டிய நிலையில், அவரை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தப்போவதாகக் கூறுவது திசை திருப்பும் வேலை என நடிகரும், தயாரிப்பாளருமான ஜே.கே.ரித்தீஷ் குற்றம்சாட்டினார். அதிகாரப்பூர்வ கட்டிடத்திற்கு தாங்கள் பூட்டுப்போடவில்லை என்றும், சங்க ஆவணங்கள் இருந்ததாலேயே வாடகை கட்டிடத்திற்கு பூட்டுப்போட நேரிட்டது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

Label