OUR CLIENTS
ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னாவை திரும்பப் பெற வேண்டும்: தில்லி சட்டப்பேரவை தீர்மானத்தால் சர்ச்சை
ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னாவை திரும்பப் பெற வேண்டும்: தில்லி சட்டப்பேரவை தீர்மானத்தால் சர்ச்சை Posted on 22-Dec-2018 ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னாவை திரும்பப் பெற வேண்டும்: தில்லி சட்டப்பேரவை தீர்மானத்தால் சர்ச்சை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் என்று தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸும், ஆம் ஆத்மியும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ராஜீவ் காந்தி விவகாரம் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்தது. 
தில்லி சட்டப் பேரவையின் இரு நாள் சிறப்புக் கூட்டத் தொடர் வியாழக்கிழமை தொடங்கியது. இதன் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை சீக்கியர்கள் படுகொலை தொடர்பான தீர்மானத்தை ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஜர்னைல் சிங் அவையில் கொண்டு வந்தார். இத்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதில், சீக்கிய கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி தில்லி அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுத வேண்டும். கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் விரைவு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். சீக்கியர் கலவரத்தை 
நியாயப்படுத்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. 
ஆம் ஆத்மி மறுப்பு: இந்நிலையில், தில்லி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ராஜீவ் காந்தி விவகாரம் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ் தனது சுட்டுரையில் கூறியிருப்பாவது: அவையில் சமர்ப்பிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்ட தீர்மானத்தில் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னாவை திரும்பப் பெறும் வகையிலான வார்த்தைகள் இல்லை. ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதைத் திரும்பப் பெற வேண்டும் என்ற திருத்தத்தை ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் தனது கையால் எழுதியுள்ளார். இதுபோன்று கையால் எழுதிய தீர்மானங்களில் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது என்பதால் இந்த தீர்மானத்தில் பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை இடம்பெறவில்லை என்றார் அவர். 
எனினும், பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவலறிந்த தில்லி சட்டப் பேரவை செயலக வட்டாரங்கள் 
தெரிவித்தன.

Label