OUR CLIENTS
சுற்றுச்சுவர் இல்லாத அரசு உயர்நிலைப் பள்ளி!
சுற்றுச்சுவர் இல்லாத அரசு உயர்நிலைப் பள்ளி! Posted on 22-Dec-2018 சுற்றுச்சுவர் இல்லாத அரசு உயர்நிலைப் பள்ளி!

காஞ்சிபுரம், டிச.22-

குண்ணம் உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குண்ணம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் குண்ணம், கோவலவேடு, அயிமிச்சேரி, எச்சூர், சிறுமாங்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
குண்ணம் ஏரிக்கு அருகில் இயங்கி வரும் இப்பள்ளி கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சுவர் இன்றி இயங்கி வருகிறது. இதனால் மதிய உணவு இடைவேளை மற்றும் உடற்பயிற்சி பாட வேளைகளில் மாணவர்கள் ஏரி மற்றும் அருகில் உள்ள மாந்தோப்புகளுக்குச் செல்வதை ஆசிரியர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அத்துடன் இரவு நேரங்களில் பள்ளியில் உள்ள வகுப்பறைகளை சமூக விரோத சக்திகள் மதுபானங்கள் அருந்தும் இடமாகப் பயன்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
இதுகுறித்து அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் கூறியது: குண்ணம் உயர்நிலைப் பள்ளிக்கு கடந்த 2009-10-ஆம் நிதியாண்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. மாணவியருக்கு ஏரியையொட்டி கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆபத்தை உணராமல் ஏரி மற்றும் அருகில் விஷப் பாம்புகள் நடமாட்டம் உள்ள தோப்பு பகுதிகளுக்குச் சென்று விளையாடுகின்றனர். இதனால் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை கருத்தில்கொண்டு, பள்ளிக் கல்வித் துறை உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றனர்.

Label