OUR CLIENTS
கோவில் சொத்து வாடகை 3 மடங்கு உயர்வு இடத்தை அனுபவிப்போர் புலம்பலோ புலம்பல்!
கோவில் சொத்து வாடகை 3 மடங்கு உயர்வு இடத்தை அனுபவிப்போர் புலம்பலோ புலம்பல்! Posted on 22-Dec-2018 கோவில் சொத்து வாடகை 3 மடங்கு உயர்வு இடத்தை அனுபவிப்போர் புலம்பலோ புலம்பல்!

கடலூர், டிச.22-

கடலூர் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பிரசித்தி பெற்ற கோவிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. குறிப்பாக கடலூரில் பாடலீஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான சொத்துகள், கடைகள், விளை நிலங்கள் உள்ளன.
அதேபோன்று புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலுக்கு கடலூர் பஸ் நிலையம் அருகே ஏராளமான கட்டடங்களும்; திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான விளை நிலங்களும் உள்ளன. இந்த சொத்துக்களை அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் வீடுகள், நிலங்கள், கடைகள் போன்றவை குறைந்த வாடகைக்கு எடுத்து அனுபவித்து வருகின்றனர். இன்னும் சிலர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தரை வாடகையில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். சிலர் கோவில் நிலத்தை பயிர் செய்வதாக எடுத்துக்கொண்டு அதை கமர்ஷியலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.கோவிலில் குறைந்த வாடகைக்கு கடைகளை எடுத்து அதை உள்வாடகைக்கு அதிக விலைக்கு கொடுத்து லாபமும் பார்க்கின்றனர். ஆனால் கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகையை மட்டும் முறையாக செலுத்துவதில்லை. இதன் காரணமாக இந்து சமய அறநிலையத்துறைக்கு வருவாய் குறைந்து வருகிறது.இது தொடர்பான வழக்கு ஒன்றில் கோர்ட் தற்போதைய அரசு வழிகாட்டுதல் மதிப்பை கணக்கிட்டு வாடகையை நிர்ணயிக்குமாறு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள கோவில் சொத்துகளின் வாடகையை உயர்த்த அறநிலையத்துறை முடிவு செய்தது.மார்க்கெட் மதிப்பு, பயன்படுத்தும் பரப்பளவு, வழிகாட்டுதல் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வாடகைதாரர்களுக்கும் கட்டணம் நிர்ணயித்து உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து வாடகைதாரர்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை பார்த்ததும் வாடகைதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பெரும்பாலானோர் உயர்த்தப்பட்ட புதிய கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். பெரிய சொத்துக்களை அனுபவிப்பவர்கள் சிலர் வாடகை பாக்கியை செலுத்தாமல் இழுத்தடித்து வருகின்றனர். காலங்கள் மாறிவரும் நிலையில் சொத்துக்கள் மதிப்பு பல மடங்கு உயர்ந்தாலும் கூடுதல் வாடகையைக் கொடுக்க மனமின்றி கால தாமதம் செய்து வருகின்றனர். ஜி.எஸ்.டி., வரி, பண மதிப்பு இழப்பு போன்றவற்றால் வியாபாரம் குறைந்துள்ளது. அறநிலையத்துறை வாடகையை 2 அல்லது 3 மடங்கு உயர்த்தி விட்டது. 30 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்கப்பட்டு வந்த இடத்தில் ஒரு லட்சம் ரூபாயாக புதிய வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. திடீரென வாடகையை உயர்த்தினால் எப்படி சமாளிப்பது. எனவே, நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என வாடகைதாரர்கள் புலம்புகின்றனர்.புதிய வாடகையை ஏற்றுக்கொள்ளாமல் வாடகைதாரர்கள் சங்கம், அறநிலையத்துறை உத்தரவை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றுள்ளது. கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள விசாலமான இடத்தில் இயங்கி வந்த ஓட்டல், வாடகை பாக்கியால் மூடப்பட்டது. தற்போது இந்த இடம் புதர்மண்டி பாம்பு பண்ணையாக மாறியுள்ளது. கோவில் வருமானத்தை உயர்த்த இந்த இடத்தை கோவில் நிர்வாகமே சுத்தம் செய்து இரு சக்கர வாகன 'பார்க்கிங்' நடத்தலாம் என முடிவு செய்துள்ளது. இதற்காக கடலூர் நகராட்சியிடம் அனுமதி கேட்டுள்ளது.

Label