OUR CLIENTS
மனைவியை விவாகரத்து செய்த ரஷ்ய அதிபர் புதின் மீண்டும் திருமணம்
மனைவியை விவாகரத்து செய்த ரஷ்ய அதிபர் புதின் மீண்டும் திருமணம் Posted on 22-Dec-2018 மனைவியை விவாகரத்து செய்த ரஷ்ய அதிபர் புதின் மீண்டும் திருமணம்

மாஸ்கோ, டிச.22-

மாஸ்கோவில் நடந்த செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய 66 வயதான ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், 2-வது திருமணம் செய்யப்போவதாக கூறியுள்ளார்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (66). இவர் 1983-ம் ஆண்டு லியுத்மிலா புதினா என்பவரை திருமணம் செய்தார். அப்போது அவர் விமான பணிப்பெண்ணாக இருந்தார்.
இவர்களுக்கு மரியா (32). கத்ரீனா (35) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணம் முடிந்து 31 ஆண்டுகளுக்கு பிறகு புதின் கடந்த 2014-ம் ஆண்டு தனது மனைவி லியுத்மிலாவை விவாகரத்து செய்தார்.
இதற்கிடையே புதினுக்கும், ரஷிய முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (34) என்பவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை புதின் மறுத்தார். அலினா 3 வயதில் இருந்தே ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்றவர் ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்க பதக்கங்களை வென்று இருக்கிறார். 2 தடவை உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
சமீபத்தில் மாஸ்கோவில் செய்தியாளர்கள் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட புதினிடம் நிருபர் ஒருவர் அவரது 2-வது திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு ''நான் ஒரு மதிப்பிற்குரிய நபரை திருமணம் செய்ய இருக்கிறேன்'' என புதின் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். ஆனால் அவரது பெயரை வெளியிட மறுத்துவிட்டார். 

Label