OUR CLIENTS
மனநல மறுவாழ்வு மையம் அமைச்சர்கள் திறந்து வைப்பு!
மனநல மறுவாழ்வு மையம் அமைச்சர்கள் திறந்து வைப்பு! Posted on 22-Dec-2018 மனநல மறுவாழ்வு மையம் அமைச்சர்கள் திறந்து வைப்பு!

தூத்துக்குடி, டிச.22-

புளியம்பட்டி மனநல மறுவாழ்வு மையத்தினை ஊரக தொழில் துறை அமைச்சர் பி.பெஞ்சமின், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் திறந்து வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் மனநல மறுவாழ்வு மையம் திறப்பு விழா புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு மனநல மறுவாழ்வு மையத்தினை திறந்து வைத்தார். ஊரக தொழில் துறை அமைச்சர் பி.பெஞ்சமின் கலந்துகொண்டு விழா பேருரையாற்றினார்.
இவ்விழாவில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது: கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்பதற்கு இனங்க நலத்திட்டகள் கோரிக்கை வைத்தால்தான் கிடைக்கும். ஆனால் கோரிக்கை வைக்காமலேயே புரட்சித்தலைவி அம்மா ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வாரி வழங்கினார்கள். அம்மாவின் அரசு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களை இயல்பு நிலைக்கு திரும்பிடும் வகையிலும் அவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் வகையிலும் மனநல மறுவாழ்வு மையத்தினை இங்கு 3 ஆண்டுகளுக்கு ரூ.52 இலட்சம் நிதியினை வழங்கியுள்ளது. 
இங்கு பங்கு தந்தை இங்கு தற்கால மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னையின் அருளால் பல்வேறு மனநல சிகிச்சை சரி படுத்தப்பட்டு வருகிறது. எனவும், எனவே பொதுமக்கள் மனநலம் பாதித்த ஊர்களில் உள்ளவர்கள் மற்றும் நன்பர்களை இம்மையத்திற்கு அழைத்து வந்து சிறப்பாக சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற உதவிட வேண்டும். இப்பகுதியில் சாலைகளை அமைக்கும் வகையில், கடம்பூர் புளியம்பட்டி சாலை ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட உள்ளது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.
  விழாவில் அமைச்சர் பெஞ்சமின் பேசியதாவது: மனநலம் பாதிக்கப்பட்டவர்களை முந்தைய காலங்களில் தெய்வீகத்தால் சுகமடைந்தாலும் அவர்களை சங்கிலியால் கட்டி வைத்து சிகிச்சை செய்யும் முறைகள் இருந்தது. தற்போது நவீன சிகிச்சை மூலம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. புளியம்பட்டி மனநல மறுவாழ்வு மையம் திறந்ததன் மூலம் மனநோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை மற்றும் தொழில் பயிற்சி வழங்கிட, புரட்சித்தலைவி அம்மாவின் அரசு ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ஊரக தொழில் துறை அமைச்சர் 
பி.பெஞ்சமின் பேசினார்.

Label