OUR CLIENTS
அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல் Posted on 22-Dec-2018 அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோபி, டிச.22-

எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. படிக்கும் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபி அருகே உள்ள நாமக்கல் பாளையத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் நடந்தது. முகாமில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு மனுக்கள் பெற்று குறைகள் கேட்டார். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிளஸ்&2 வகுப்பு முடியும் போதே மாணவ & மாணவிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய பாட திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
அங்கன்வாடி பள்ளிகளுடன் இணைந்து 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்பு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த குழந்தைகளுக்கு ஆங்கிலம் சரளமாக பேச பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அரசு சார்பில் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும். 
இந்தாண்டில் இருந்து 1&ம் வகுப்பு முதல் 5&ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும், 9&ம் வகுப்பு முதல் 10&ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும், 11&ம் வகுப்பு முதல் 12&ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான சீருடைகளும் என 4 வகை சீருடைகள் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Label