OUR CLIENTS
காட்பாடியில் சாலையில் குப்பை கொட்டும் பெட்டிக்கடைக்காரர்!
காட்பாடியில் சாலையில் குப்பை கொட்டும் பெட்டிக்கடைக்காரர்! Posted on 22-Dec-2018 காட்பாடியில் சாலையில் குப்பை கொட்டும் பெட்டிக்கடைக்காரர்!

வேலூர், டிச.22-

காட்பாடியில் வள்ளிமலைரோட்டில் ஆவாரங்காடு பகுதியில் சாலையில் பிளாஸ்டிக் குப்பைகளை மலைபோல் பக்கத்து வீடுகளில் கொட்டி பெட்டிக்கடைக்காரர் அட்டகாசம் செய்து வருகிறார்.
காட்பாடி வள்ளிமலைரோட்டில் ஆவாரங்காடு பகுதியில் பள்ளிக்குப்பம் செல்லும் சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் கிளியன். இவரது மனைவி செல்வி. கிளியன் சகோதரர் மச்சக்காளை, இவரது மனைவி ரம்யா. இவர்கள் மதுரையை பூர்வீமாக கொண்டவர்கள். இந்நிலையில் இந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் கொட்டக்கூடாது என்றும், பிளாஸ்டிக் கழிவுகளை இனி நாங்கள் வாங்க மாட்டோம் என்றும் குப்பைகளை சேகரிப்போர் (துப்புரவு பணியாளர்கள்) வீடு வீடாகச் சொல்லி செல்கின்றனர். ஆனால் இவர்கள் கடைகளில் சேகரமாகும் பிளாஸ்டிக் குப்பைகளை அருகில் உள்ள வீட்டுக்கு எதிரில் சாலையில் கொட்டி விடுகின்றனர். 
இந்த பிளாஸ்டிக் குப்பைகள் காற்றில் பறந்தபடி உள்ளது. இதனால் அந்தப்பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது. அத்துடன் இந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா, ஹான்ஸ், சாந்தி பாக்கு, பான்பராக், பாங்கு போன்ற பொருட்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது. உணவு கட்டுப்பாட்டு அலுவலர், மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் வருகை தருகிறார்கள் என்று தகவல் தெரிந்தால் அந்த போதை பொருட்களை வீட்டுக்குள் கொண்டு சென்று பதுக்கி விடுகிறார்கள். இதனால் உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் அவர்களது வீட்டுக்குள் ரெய்டு நடத்தினால் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கைப்பற்றலாம். விரைவில் இந்த பெட்டிக்கடைக்காரர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அந்தப்பகுதிவாழ் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Label