OUR CLIENTS
வரும் 24ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
வரும் 24ல் தமிழக அமைச்சரவை கூட்டம் Posted on 22-Dec-2018 வரும் 24ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை, டிச.22-

தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் வருகிற 24ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் வருகிற 24ந்தேதி பகல் 12 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் 2 மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என அந்த ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இதற்கான பணிகளில் ஆலை ஈடுபட்டு உள்ளது.  இதனால் ஸ்டெர்லைட் ஆலை பற்றி கொள்கை முடிவு எடுக்க எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Label