OUR CLIENTS
இலங்கை கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை- டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
இலங்கை கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை- டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு Posted on 22-Dec-2018 இலங்கை கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை- டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை:-  

இலங்கை கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மழை முன்னறிவிப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
இலங்கை கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. 
காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிக்கு நாளை வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 23% குறைவாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பை விட 55% குறைவாக மழை பெய்துள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

Label