OUR CLIENTS
2010-ஆம் ஆண்டுவரை சேர்ந்தவர்களுக்கு அரியர் தேர்வு எழுத இனி சிறப்பு அனுமதி வழங்கப்படாது - அண்ணா பல்கலை.
2010-ஆம் ஆண்டுவரை சேர்ந்தவர்களுக்கு அரியர் தேர்வு எழுத இனி சிறப்பு அனுமதி வழங்கப்படாது - அண்ணா பல்கலை. Posted on 22-Dec-2018 2010-ஆம் ஆண்டுவரை சேர்ந்தவர்களுக்கு அரியர் தேர்வு எழுத இனி சிறப்பு அனுமதி வழங்கப்படாது - அண்ணா பல்கலை.

2010-ஆம் ஆண்டுவரை பி.இ. படிப்புகளில் சேர்ந்தவர்களுக்கு அரியர் தேர்வு எழுத இனி சிறப்பு அனுமதி வழங்கப்படாது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பொதுவாக 4 ஆண்டுகள் படிப்பை முடித்த பின் 3 ஆண்டுகள் வரை அரியர் தேர்வுகளை எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்நிலையில் 2010-ஆம் ஆண்டுவரை பி.இ. படிப்புகளில் சேர்ந்து அரியர் தேர்வுகளை எழுதி முடிக்காதவர்களுக்கு கடந்த பிப்ரவரி, ஆகஸ்ட் ஆகிய இரு செமஸ்டர்களில் தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்த இரண்டு செமஸ்டர்களில் தேர்வுகள் எழுதியும் வெற்றி பெற முடியாத மாணவர்களுக்கு மேற்கொண்டு வாய்ப்புகள் வழங்கப்படாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இனிவரும் காலங்களில் ஏழு ஆண்டுகளுக்குள் பொறியியல் படிப்பை முடிக்காதவர்களுக்கு எந்த சிறப்பு அனுமதியும் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label