OUR CLIENTS
தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது
தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது Posted on 24-Dec-2018 தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில்  இன்று நடைபெறுகிறது. 
கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு மூன்று மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழக அமைச்சரவை இன்று பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது.
அடுத்த மாதம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் 2019-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தொடருக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அதில் பல புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலையும் தமிழக அமைச்சரவை அளிக்கும் எனத் தெரிகிறது.
7 பேரின் விடுதலை வலியுறுத்தப்படும்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரின் விடுதலை தொடர்பாக கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் இன்று நடைபெறும் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மீண்டும் நினைவூட்டலை அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
அதுபோல, அடுத்த மாதம் சட்டப்பேரவைக் கூட்டத்தை எந்த நாளில் தொடங்குவது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்குவது பற்றியும், ஸ்டெர்லைட் பிரச்னை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.

Label