OUR CLIENTS
மும்முனை மீட்டர் தட்டுப்பாடு
மும்முனை மீட்டர் தட்டுப்பாடு Posted on 24-Dec-2018 மும்முனை மீட்டர் தட்டுப்பாடு

வேலூர், டிச.24-

மீட்டர் தட்டுப்பாட்டால் புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
மின் வாரியம் வீடுகளுக்கு ஒரு முனை மற்றும் மும்முனை பிரிவுகளின் கீழ் மின் இணைப்பு வழங்குகிறது. புதிய மின் இணைப்பு பெற விரும்புவோர் தங்கள் பகுதியில் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில் வாரியத்தின் இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். 
புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தை பல ஆண்டுகளுக்கு பின் மின் வாரியம் உயர்த்த உள்ளது. இதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. இதுவரை ஆணையம் அனுமதி வழங்கவில்லை. இதற்கிடையில் கூடுதல் செலவை தவிர்க்க புதிய மின் இணைப்பு கேட்டு பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் மீட்டர் இல்லை என ஊழியர்கள் கூறுவதாக புகார் எழுந்துள்ளது. 
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்து மூன்று வாரங்களுக்கு மேலாகியும் இணைப்பு வழங்கவில்லை. இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டால் மும்முனை இணைப்பிற்கான மீட்டர் இல்லை. மீட்டர் வந்தால் தான் இணைப்பு வழங்கப்படும். யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என்கின்றனர். அதேசமயம் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டும் விரைவாக மின் இணைப்பு வழங்குகின்றனர். 
உதவி பொறியாளர்களிடம் புகார் அளித்தால் டெல்டா மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட சாதனங்களை சீரமைக்க அதிக நிதி செலவாகிறது; இதனால் மீட்டர் வாங்க பணம் இல்லை என்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Label