OUR CLIENTS
விசாலமானது செயற்கை கடற்கரை சுற்றுலா பயணிகள் குதூகலம்!
விசாலமானது செயற்கை கடற்கரை சுற்றுலா பயணிகள் குதூகலம்! Posted on 24-Dec-2018 விசாலமானது செயற்கை கடற்கரை சுற்றுலா பயணிகள் குதூகலம்!

புதுச்சேரி, டிச.24-

கடற்கரையில் அதிகரித்து வரும் விசாலமான மணற்பரப்பு குழந்தைகள், சுற்றுலா பயணிகள் மத்தியில் குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியின் அழகினை ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் புதுச்சேரி கடற்கரையின் அழகை ரசிக்க தவறுவதில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை பல மீட்டர் தூரத்திற்கு அழகாக காட்சியளித்த மணற்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போனது. 
கடல் அரிப்பால் மறைந்து போன மணற்பரப்பினை மீட்டெடுக்கும் முயற்சியாக, செயற்கை மணற் பரப்பு உருவாக்கும் திட்டத்தை, புதுச்சேரி அரசு மத்திய அரசுடன் இணைந்து 25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரில் கடற்கரையில் இருந்து 120 மீட்டர் தூரத்தில் இரும்பிலான முக்கோண வடிவமுடைய ராட்சத மிதவையை, கடலினுள் இறக்கி உள்ளனர். இதனால் கடல் நீரோட்டத்தில் மணல் அடித்து செல்லாமல் தடுக்கப்பட்டு 200 மீட்டர் தொலைவிற்கு செயற்கையான மணற்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இது படிப்படியாக உயர்த்தி அடுத்த 2 ஆண்டுகளில் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு செயற்கை மணற்பரப்பு உருவாக்கப்பட உள்ளது. புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கடற்கரை மணல் மீட்டெடுப்பு பணிகளால் கடந்த சில தினங்களாக விசாலாமான செயற்கை மணல் பரப்பு உருவாகி வருகிறது.
பல ஆண்டுகளுக்கு பிறகு கடற்கரையில் உருவாகியுள்ள இந்த நீண்ட மணல் பரப்பு குழந்தைகள், சுற்றுலா பயணிகளுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் மணற்பரப்பில் விளையாடி மகிழ்ந்தனர்.

Label