OUR CLIENTS
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வாழ்வில் வெற்றியடையச் செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றியறிவிப்பு!
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வாழ்வில் வெற்றியடையச் செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றியறிவிப்பு! Posted on 24-Dec-2018 மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வாழ்வில் வெற்றியடையச் செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றியறிவிப்பு!

விழுப்புரம், டிச.24-

மாற்றுத் திறனாளி களுக்கான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த 1993ஆம் ஆண்டில் ஊனமுற்றோருக்கான தனி இயக்ககம் சமூக நல இயக்ககத்திலிருந்து பிரித்து ஏற்படுத்தப்பட்டது.

1994ஆம் ஆண்டு முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான விரிவான மாநிலக் கொள்கையை இவ்வரசு வெளியிட்டது. இத்துறை, மாற்றுத்திறனாளிகள் (சமவாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம், 1995-ன்படி ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் அலுவலகமாக 1999ஆம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டு, இந்திய ஆட்சிப்பணி நிலையிலுள்ள உயர் அலுவலர் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையாக நியமிக்கப்பட்டார்.
மாற்றுத் திறனாளி களுக்குள்ள தனிப்பட்ட திறமைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களை பிற பெயர்களை கொண்டு அழைப்பதை தவிர்த்து அவர்கள் மீது சமுதாயம் கொண்டுள்ள கண்ணோட் டத்தை மாற்றுவதற்கென இனி அவர்களை மாற்றுத்திறனாளிகள் என அழைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசால் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கென சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என தனியாக ஒரு நிர்வாகத் துறை துவக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் ஒரு அங்கமாக அனைவரும்
ஏற்கவும், சமுதாய வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்பதற்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்களின் முழுபங்கேற்பை உறுதி செய்வதற்கும் உரிய விழிப்புணர்வை இவ்வரசு ஏற்படுத்தி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றியோர்க் கான பராமரிப்பு உதவித் தொகை, தசை சிதைவு நோயினால் பாதிக்கப் பட்டோருக்கு பராமரிப்பு உதவித்தொகை, தொழு நோயால் பாதிக் கப்பட்ட மாற்றத்திறனாளிகளுக்கான மாத பராமரிப்பு உதவித் தொகை, வாசிப்பாளர் உதவித் தொகை, மனவளர்ச்சி குன்றியோர் ஆரம்ப நிலை பயிற்சி மையம், காது கேளாதோர் ஆரம்ப நிலை பயிற்சி மையம், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தொழில் பயிற்சியுடன் 14 வயது உட்பட்ட பெண்களுக் கான இல்லம், இலவச பேருந்து பயணஅட்டை, காது கேளாதோருக்கான சைகை மொழி திட்டம், காது கேளாதோர் சிறப்பு பள்ளி சிறப்பு ஆசிரியர் ஊதிய மானியம், கை கால் இயக்க குறைபாடுடையோர் சிறப்பு பள்ளி உணவூட்டு மானியம், காது கேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் சிறப்பு பள்ளி உணவூட்டு மானியம், மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி உணவூட்டு மானியம், மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி ஆசிரியர் ஊதிய மானியம், படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மானியம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் தாழனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜார்ஜ்ஸ் டெல்ராஜ் என்பவரை சந்தித்த போது தெரிவித்ததாவது: என் பெயர் ஜார்ஜ்ஸ் டெல்ராஜ். நான் 12ஆம் வகுப்பு படிக்கிறேன். நான் எங்கு சென்றாலும், அடுத்தவரின் துணையை நம்பி இருக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது தான் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை பற்றி பத்திரிக்கையின் வாயிலாக அறிந்து கொண்டேன். அதன்படி, எனக்கு சக்கர நாற்காலி வேண்டி மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் விண்ணப்பித்தேன்.
எனக்கு தற்போது சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளது. எனவே, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இனிவரும் காலங்களில் நான் முயற்சி செய்து, தனியாக செல்ல இயலும். அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அளிக்கும் பல்வேறு நலத் திட்டங்களில் பயனடைந்து வருகிறேன். என்னையும் மற்ற சாதாரண மனிதர்களை போல செயல்பட உதவிய
தமிழக முதல்வருக்கு மகிழ்ச் சியுடன் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் டி.மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சத்யபிரியா என்பவரை சந்தித்த போது தெரிவித்ததாவது: என் பெயர் சத்யபிரியா. வயது 34. எனது தந்தை பெயர் செல்வராஜ். நான் டி.மேட்டுப்பாளையத்தில் பங்க் கடை நடத்தி வருகிறேன். இந்த கடையில் வரும் வருமானத்தைக் கொண்டு தான் பிழைத்து வருகிறேன். நான் எங்கு சென்றாலும், அடுத்தவரின் துணையையே நாடி இருக்க வேண்டி இருந்தது. எனக்கு சொந்தமாக வண்டி வாங்கி பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், எனது கடையில் வரும் வருமானம் எனது அன்றாட செலவுக்கே போதாமல் இருந்தது. 
அப்போது தமிழ்நாடு அரசின் விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் குறித்து தெரியவந்தது. உடனடியாக, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி இத்திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள் குறித்து, விசாரித்தேன். தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். எனது, விண்ணப்பம் சரியாக இருந்ததால், அரசால் என் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, எனக்கு இப்போது பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை போன்ற மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திவரும், தமிழக முதல்வருக்கு எனது மனம்கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். விழுப்புரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரை சந்தித்தபோது தெரிவித்ததாவது: என் பெயர் பாஸ்கர். வயது 25. எனது தந்தை பெயர் செல்வராஜ். நான் விழுப்புரத்தில் வசித்து வருகிறேன். கால்
பாதிக்கப்பட்ட, மாற்றுத்திறனாளியான எனக்கு பல்வேறு இடங்களுக்கு சென்றுவர சிரமமாக இருந்தது. அப்போது செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை பார்த்தேன். அப்போதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுவது தெரிய வந்தது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி பெட்ரோல் ஸ்கூட்டர் கேட்டு, விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்டு எனக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொகுப்பு;
நி.சிவகுரு,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
விழுப்புரம்.

Label