OUR CLIENTS
கடலூர் - சித்தூர் சாலை அகலப்படுத்தும் பணி தொடக்கம் மின்கம்பம் மாற்றியமைக்காததால் பணிகள் தாமதம்!
கடலூர் - சித்தூர் சாலை அகலப்படுத்தும் பணி தொடக்கம் மின்கம்பம் மாற்றியமைக்காததால் பணிகள் தாமதம்! Posted on 26-Dec-2018 கடலூர் - சித்தூர் சாலை அகலப்படுத்தும் பணி தொடக்கம் மின்கம்பம் மாற்றியமைக்காததால் பணிகள் தாமதம்!

கடலூர், டிச.26-

கடலூர் - பண்ருட்டி நெடுஞ்சாலையில் நகர எல்லையான சாவடி வரை 5 கோடி ரூபாய் மதிப்பில் 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி தொடங்கங்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் வாகன பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்கள் அதிகரிக்கும் அளவுக்கு சாலைகள் அதிகரிப்பதில்லை. இதனால் சாலையில் வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சாலைகள் முடிந்தவரை அகலப்படுத்தப்பட்டு வருகின்றன.இரு வழிச் சாலைகளை 4 வழிச் சாலைகளாகவும், 4 வழிச் சாலைகளை 6 வழி மற்றும் 8 வழிச் சாலைகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. 2017-18 ம் ஆண்டில் கடலூர் - சித்தூர் சாலை (நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் வழி) 2 வழிச் சாலையாக இருந்தது. தற்போது இந்த சாலை வி.எஸ்.டி வரை 4 வழி சாலையாக மாற்றும் பணிக்காக 5 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சாலை 4 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு பணிக்கும் 1.2 கோடி மதிப்பில் ரூபாய் டெண்டர் விடப்பட்டுள்ளன. ஏற்கனவே இருக்கும் சாலையுடன் ஒரு பக்கத்திற்கு 2.5 மீட்டர் அகலம் அளவில் இரு பக்கத்திற்கும் புதிதாக சாலை போடும் பணி தொடங்ங்கப்பட்டுள்ளது. அதாவது மொத்தத்தில் 15.1 மீட்டர் அகலம் உடையதாக இருக்கும்.
 இந்த சாலையில் ஒரு பகுதி ஏற்கனவே ரவுண்டானாவில் இருந்து அரசு மருத்துவமனை வரை 4 வழி சாலையாக மாற்றப்பட்டு விட்டது.மீதமுள்ள 3 பகுதிகளுக்கான பணிகள் தற்போது ததொடங்கி நடந்து வருகிறது. அரசு மருத்துவமனை முதல் சாவடி வரையிலான 2.2 கி.மீ., தூரம் வரை இந்த சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. இதுமட்டுமல்லாமல் 800 மீட்டர் நீளமும், சாவடி ஜங்ஷனில் 100 மீட்டரும் சாலை போடப்பட இருக்கிறது.சாலையின் இரு புறங்களிலும் சாலைக்கென உள்ள காலி இடத்தில் மேல் மண்ணை அகற்றிவிட்டு புதிதாக ஒரே மாதிரியான மண்ணை நிரப்பி தார் சாலை போடப்பட உள்ளது. அதையொட்டி தற்போது செம்மண்டலம் பகுதியில் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இந்த சாலை அகலப்படுத்துவற்கு இடையூறாக குமுதம் பெட்ரோல் பங்க்கில் இருந்து சாவடி வரை 54 மின் கம்பங்கள் சாலையோரம் உள்ளன. அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தற்போது கஜா புயல் காரணமாக மின்வாரிய ஊழியர்கள் வெளிமாவட்டத்திற்கு சென்றுள்ளதால் மின் கம்பங்களை அகற்றும் பணி தாமதமாகி வருகிறது. 
இந்த பணிகள் முடிந்த பின்னர் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து சாவடி வரை சாலையின் மையத்தில் சென்டர் மீடியன் அமைக்கப்படும். இப்பணிகள் யாவும் வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கோண்டூர் வி.எஸ்.டி., வரை 4 வழிச் சாலை சாலை முடிந்த பின்னர், தற்போது புதிதாக திட்டமிடப்பட்டுள்ள கடலூர் - மடப்பட்டு 4 வழிச்சாலை நில ஆர்ஜிதப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த சாலை இன்னும் 2 ஆண்டுகளில் பூர்த்தி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கடலூர் - சித்தூர் 4 வழிச்சாலை மடப்பட்டு சாலையுடன் இணைக்கப்பட உள்ளது. 
கடலூரில் இருந்து நகர பகுதிகள் அனைத்தும் 4 வழிச் சாலைகளாக மாறும். அந்த சாலை மடப்பட்டு வரை நீட்டிக்கப்பட்டு விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும். இதனால் கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பண்ருட்டி மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கும் செல்ல முடியும்.

Label