OUR CLIENTS
அடிப்படை வசதிகளின்றி அரசு உயர்நிலைப்பள்ளி அவதிக்குள்ளாகும் மாணவர்கள், ஆசிரியைகள்!
அடிப்படை வசதிகளின்றி அரசு உயர்நிலைப்பள்ளி அவதிக்குள்ளாகும் மாணவர்கள், ஆசிரியைகள்! Posted on 26-Dec-2018 அடிப்படை வசதிகளின்றி அரசு உயர்நிலைப்பள்ளி அவதிக்குள்ளாகும் மாணவர்கள், ஆசிரியைகள்!

பரமக்குடி, டிச.26-

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பெருமாள்கோவில் அரசு  உயர்நிலைப்பள்ளியில் போதிய கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள்  இல்லாததால் அசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி  வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில்  பெருமாள்கோவில் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி கடந்த  2009-10ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 
பள்ளி  கட்டுவதற்கு போதுமான இடங்களை அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தானமாக  கொடுத்துள்ளனர். பெருமான்கோவில், தோளூர், நெடுங்குளம், நல்லுக்குறிச்சி  உள்ளிட்ட அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு  பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற அனைத்து மாணவ, மாணவிகள் 400க்குமேல்  மதிப்பெண்கள் பெற்று 95 சதவீதத்திற்கு மேல் தேற்ச்சிபெற்றுள்ளனர்.

ஆனால்,  அரசு தரப்பில் பள்ளிக்கு தேவையான எந்தவிதமான அடிப்படை வசதிகளும்  செய்துகொடுக்கவில்லை, மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு  கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் செயல்படாமல் சேதமடைந்து கானப்படுகிறது.  அதேபோல், மணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தலா ஒரே ஒரு கழிப்பறை உள்ளதால்  போதுமானதாக இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில நாட்களாக பெண்கள்  அருகில் உள்ள வீடுகளுக்கு சென்றுவரும் சூழ்நிலை உள்ளது.
மாணவர்கள்  பள்ளிக்கு முன்பு உள்ள அபிராமம்-பரமக்குடி சாலையை கடந்து சென்று இயற்கை  உபாதைகளை கழித்துவருகின்றனர். பள்ளிக்குள் மாணவ, மாணவிகளுக்கு குறைந்த  அளவில் குடங்களில் குடிநீர் வைப்பதால், வீட்டிலிருந்து கொண்டுவரப்படும்  தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். போதுமானதாக இல்லையெனில் உப்புநீரை பருகி  தாகம் தீர்த்து வருகின்றனர். 
பள்ளியில் உள்ள வகுப்பறைகள்  மாணவ, மணவியர்களுக்கு போதுமானதாக இல்லை. பள்ளிக்கு சுற்றுசுவர் இல்லாததால்  திறந்தவெளியாக உள்ளதால், மாணவிகளுக்கு குறைந்தளவு பாதுகாப்பு இல்லாத நிலை  உருவாகியுள்ளது. பொதுமக்கள் சார்பாக சம்மந்தப்பட்ட கல்வி மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும்  எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Label