OUR CLIENTS
தமிழக சட்டப்பேரவை ஜனவரி 2ஆம் தேதி கூடுகிறது: சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை ஜனவரி 2ஆம் தேதி கூடுகிறது: சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு Posted on 26-Dec-2018 தமிழக சட்டப்பேரவை ஜனவரி 2ஆம் தேதி கூடுகிறது: சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 2 ஆம் தேதி கூடுகிறது என சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழக ஆளுநர் இந்திய அரசமைப்பு, பிரிவு 174(1)ன் கீழ், தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தை, 2019ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 2ஆம் நாள், புதன்கிழமை, காலை 10.00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசமைப்பு, பிரிவு 176(1)ன் கீழ், தமிழக ஆளுநர் தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் அன்றே, அதாவது, 2019ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 2ஆம் நாள், புதன்கிழமை, காலை 10.00 மணிக்கு உரை நிகழ்த்த உள்ளார்கள். அவ்வமயம் தங்கள் வருகையை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
இந்த கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. 
 

Label