OUR CLIENTS
வெள்ளை மாளிகையில் தனிமையில் அதிபர் டிரம்ப்!
வெள்ளை மாளிகையில் தனிமையில் அதிபர் டிரம்ப்! Posted on 26-Dec-2018 வெள்ளை மாளிகையில் தனிமையில் அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன், டிச.26-

அமெரிக்கா கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ள வேளையில், ஜனநாயகக் கட்சியினர் பேச்சு நடத்த வருவார்கள் என எதிர்பார்த்து 
வெள்ளை மாளிகையில் தான் மட்டும் தனியே இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

மெக்சிக்கோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கும் விவகாரத்தால், பல்வேறு அரசுத்துறைகளுக்கு நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேறாமல், அவற்றின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இந்நிலையில், அவசர, அவசியத் தேவையான எல்லைப் பாதுகாப்பு குறித்து உடன்பாடு ஏற்படுத்துவதற்காக ஜனநாயகக் கட்சியினர் வருவார்கள் என, வெள்ளை மாளிகையில் தான் மட்டுமே தனியே இருப்பதாக அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜனநாயகக் கட்சியினர் உடன்பட மறுப்பதால், ஒரு கட்டத்தில் நாட்டுக்கு ஏற்படப்போகும் இழப்பு எல்லைச் சுவர் கட்டுவதற்கு தேவையான தொகையைவிட அதிகமாக இருக்கப்போகிறது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியினர் பாசாங்குகாரர்கள் என்றும், ஊடகங்களோ கதை கட்டுவதாகவும், வெளிநாட்டுக் கொள்கையில் செனட்டர்களின் கருத்து தவறானதாக இருப்பதைப் போல ஜிம் மேட்டிஸ் கருத்தும் தவறானது என்றும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

Label