OUR CLIENTS
தங்கத்தில் மிகச்சிறிய அளவில் கிறிஸ்துமஸ் குடில் தங்க நகைத் தொழிலாளி இமாலய சாதனை!
தங்கத்தில் மிகச்சிறிய அளவில் கிறிஸ்துமஸ் குடில் தங்க நகைத் தொழிலாளி இமாலய சாதனை! Posted on 26-Dec-2018 தங்கத்தில் மிகச்சிறிய அளவில் கிறிஸ்துமஸ் குடில் தங்க நகைத் தொழிலாளி இமாலய சாதனை!

வாணியம்பாடி, டிச.26-

வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்த  நகைத் தொழிலாளி தங்கத்தில் மிகச்சிறிய அளவில் கிறிஸ்துமஸ் குடில் செய்து இமாலய சாதனை படைத்துள்ளார்.

ஆம்பூரைச் சேர்ந்த தங்க நகைத் தொழிலாளி சி.எஸ். தேவன். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் உலக சாதனை புரிவதற்காக, தங்கத்தில் மிகச்சிறிய அளவில் கிரிக்கெட் உலக கோப்பை, திருக்குறள் சுவடி, முன்னாள் தமிழக முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா, மகாத்மா காந்தி, மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம்,  இஸ்ரோவின் செயற்கைக் கோள் ஏற்றிச் சென்ற ராக்கெட், கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றைச் செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 400 மி.கி. எடையிலான மிகச்சிறிய ஷூக்கள் ஆகியவற்றை மிகச்சிறிய அளவில் தங்கத்தில் உருவாக்கி சாதனை படைத்து வருகிறார்.
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால் 3 கிராம் 700 மில்லி தங்கத்தில் மிகச்சிறிய அளவில் கிறிஸ்துமஸ் குடிலைச் செய்துள்ளார்.  கிறிஸ்து பிறப்பை தத்ரூபமாக தங்கத்தில் வடிமைத்து வெள்ளி தட்டில் பதித்துள்ளார்.  அதனை சுமார் 12 மணி நேரம் இடைவிடாத தொடர் முயற்சியால் உருவாக்கியுள்ளார். இதனை பொதுமக்கள் பார்த்து நகைத்தொழிலாளி தேவனை பாராட்டி வருகின்றனர்.

Label