OUR CLIENTS
அரசு பொருட்காட்சி தொடக்க விழா!
அரசு பொருட்காட்சி தொடக்க விழா! Posted on 26-Dec-2018 அரசு பொருட்காட்சி  தொடக்க விழா!

வேலூர், டிச.26-\

வேலூரில் மாங்காய் மண்டி அருகில் அரசு பொருட்காட்சி நேற்றுமுன்தினம் மாலை தொடங்கியது. வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை வகித்தார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். செய்திமக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார்,  இணை இயக்குனர் முத்துசாமி, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி, கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி ஜி.லோகநாதன், ஆவின் சேர்மன் வேலழகன் ஆகியோர் இந்த அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். விழாவின் தொடக்கத்தில்  வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் வரவேற்பு உரையாற்றினார்.
விழாவில் தலைமையுரையாற்றிய செய்தி மற்றும் விளம் பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தனது உரையில், இந்த பொருட்காட்சி இருநூற்று ஒன்றாவது பொருட் காட்சியாகும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு தினத்தில் இந்த பொருட் காட்சியை தொடங்கியுள்ளோம். 
புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் சேலம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மட்டுமே வருடந்தோறும் இந்த பொருட்காட்சி நடத்தப் படுகிறது, நாற்பத்தைந்து நாட்கள் நடக்கும் இந்த பொருட் காட்சியில் இருபத்தேழு துறையைச் சேர்ந்த அரங்குகள் அமைத்து திரைகளின் பணிகளை விளக்குகிறோம். இரண்டு கோடியே ஐம்பது லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது வேலூரில் மட்டுமே என்ற பெருமை வேலூருக்கு உண்டு. இவ்வாறு அமைச்சர் பேசினார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரைசாமி. விழாவினை தொகுத்து வழங்கினார். விழாவில் திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Label