OUR CLIENTS
5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்க அரசு உத்தரவு!
5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்க அரசு உத்தரவு! Posted on 26-Dec-2018 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்க அரசு உத்தரவு!

சென்னை, டிச.26-

ஆட்சேபகரமற்ற நிலங்களை ஆக்கிரமித்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலான ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுள்ள தமிழக அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து நீண்ட காலமாக குடியிருப்போருக்கு வரன்முறை செய்து பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்திற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
 நீர் நிலைகள், உள்ளாட்சி சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களை தவிர்த்து பிற புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்போருக்கு வரன்முறை செய்து வீட்டு மனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்தலாம். பட்டா பெறுபவர்களின் ஆண்டுவருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். நில மதிப்பின் அடிப்படையில் 50 ஆயிரம் ரூபாய் வரை தாசில்தார் 75 ஆயிரம் ரூபாய் வரை ஆர்.டி.ஓ., 1.50 லட்சம் ரூபாய் வரை மாவட்ட வருவாய் அலுவலர், ஐந்து லட்சம் ரூபாய் வரை கலெக்டர், 7.50 லட்சம் ரூபாய் வரை நில நிர்வாக ஆணையர், அதற்கு மேல் அரசும் பட்டா வழங்க அதிகாரம் வழங்கலாம். ஊரகப் பகுதிகளில் நான்கு சென்ட், நகரப் பகுதிகளில் இரண்டரை சென்ட், மாநகராட்சி பகுதிகளில் இரண்டு சென்ட் வரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கலாம்.
ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆர்.டி.ஓ., தலைமையில் தாசில்தார், வட்ட தலைமை நில அலுவலர் இடம் பெற்ற குழுவினர் சரிபார்த்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கலாம். ஆட்சேபகர மில்லாத புறம்போக்கு நிலங்களில் கண்டறியப்பட்ட குடியிருப்பு ஆக்கிரமிப்புகள்,1.26 லட்சம் இனங்களுக்கு மாவட்ட நிர்வாகம், பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளலாம். அரசின் அனுமதி தேவையில்லாத இனங்களில் கலெக்டர், டி.ஆர்.ஓ., - ஆர்.டி.ஓ., ஆகியோரை உறுப்பினர் களாக உடைய மாவட்ட குழு, நில நிர்வாகஆணையர் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்யலாம்.
தடையாணை புத்தகத்தில் பதியப்பட்டுள்ள நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொறுத்தவரை, டி.ஆர்.ஓ., - ஆர்.டி.ஓ., ஆகியோரால் பதியப் பட்டிருந்தால், கலெக்டர் அதை விலக்கி, தகுதியுள்ள நபர்களுக்கு, வீட்டு மனை பட்டா வழங்க, சிறப்பு நேர்வாக அனுமதிக் கலாம். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Label