OUR CLIENTS
புத்தாண்டு கொண்டாட குவிந்த சுற்றுலா பயணிகள் களை கட்ட ஆரம்பித்த புதுச்சேரி சுற்றுலா தலங்கள்!
புத்தாண்டு கொண்டாட குவிந்த சுற்றுலா பயணிகள் களை கட்ட ஆரம்பித்த புதுச்சேரி சுற்றுலா தலங்கள்! Posted on 26-Dec-2018 புத்தாண்டு கொண்டாட குவிந்த சுற்றுலா பயணிகள் களை கட்ட ஆரம்பித்த புதுச்சேரி சுற்றுலா தலங்கள்!

புதுச்சேரி, டிச.26-

புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் சுற்றுலா தலங்கள் களைகட்டி வருகின்றன.

சுற்றுலா நகரமான புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு புத்தாண்டுக்கு ஐந்து நாட்களே உள்ள நிலையில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர். 
அவர்கள் ஆரோவில், கடற்கரை, அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில், நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம், ஆரோவில், ஊசுட்டேரி என பல்வேறு இடங்களை பார்வையிட்டு வருகின்றனர்.இதனால் கடற்கரை சாலை மட்டுமின்றி நகர வீதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. குறிப்பாக கடற்கரை சாலை திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. ஒயிட் டவுனில் அமைந்துள்ள அரவிந்தர் ஆசரமத்தை காண சுற்றுலா பயணிகள் நேற்று ஆயிரக்கணக்கில் குவிந்ததால் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் அவர்களுக்கு ஈடுகொடுத்து படகுகளை இயக்க முடியாமல் ஊழியர்கள் திணறி வருகின்றனர். படகு குழாமின் வருமானம் நாள் ஒன்றுக்கு ரூ. 5 லட்சத்தை தாண்டுகிறது.புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரும் நிலையில் நகரில் வாகனங்கள் நிறுத்த இடமின்றி தவிக்கின்றனர். ஒயிட் டவுன் பகுதி சாலைகளில் அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்தும் அடிக்கடி ஸ்தம் பித்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
எனவே சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலீசார் ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். ஓட்டல்கள் ஹவுஸ்புல் புத்தாண்டை கொண்டாட புதுச்சேரியில் உள்ள முன்னணி ஓட்டங்கள், கடற்கரை சொகுசு விடுதிகள், ரெஸ்டாரண்ட்கள் கடந்த மாதத்தில் இருந்தே தயாராகி வருகின்றன. அதிக அளவில் விடுதிகள் இருந்தும் ஒரு மாதத்திற்கு முன்பே அறைகள் அத்தனையும் புக்கிங் ஆகிவிட்டன. குறிப்பாக ஆன் லைன் மூலமே புக்கிங் முடிந்து விட்டதாக பிரபல ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். இதனால் தங்கும் விடுதிக்காக சுற்றுலா பயணிகள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Label