OUR CLIENTS
திமுக-காங்கிரஸ் மக்களிடம் தோல்வி அடைந்த கூட்டணி தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
திமுக-காங்கிரஸ் மக்களிடம் தோல்வி அடைந்த கூட்டணி தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு Posted on 26-Dec-2018 திமுக-காங்கிரஸ் மக்களிடம் தோல்வி அடைந்த கூட்டணி தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

பீளமேடு, டிச.26-

திமுக மற்றும் காங்கிரஸ் மக்களிடம் தோல்வி அடைந்த கூட்டணி என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

கோவை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- மேகதாது விவகாரத்தில் ஸ்டாலினும், திருநாவுக்கரசரும் கர்நாடகாவிற்கு சென்று அணை கட்டக் கூடாது என கூற வேண்டும். ஏன் இதுவரை அவ்வாறு கூறவில்லை. பா.ஜனதாவும் வாக்கு சாவடிக்கு செல்வோம், மக்களிடம் சொல்வோம், வாக்கு சாவடியை வெல்வோம். தமிழகம் முழுவதும் இன்று(நேற்று) பா.ஜ.க. சார்பில் நல்லாட்சி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களிடம் நல்ல பல திட்டங்களை நாங்கள் எடுத்து செல்கிறோம்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொத்துக்களை எப்படி சேர்த்தார்கள் என்பதை மக்களிடம் எடுத்து சொல்வோம். மக்களிடம் செல்வாக்கு இல்லாத தோல்வி அடைந்த கூட்டணி தான் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி. விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி வருகிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக கூறி அவர்களை தற்கொலைக்கு தள்ளுகின்றனர்.
தற்போது பல பொருட்களுக்கு 0 சதவீத ஜி.எஸ்.டி. வரி தான் உள்ளது. 136 பொருட்களுக்கு வரியே இல்லை. தமிழகத்தில் நல்லது நடக்கும் எந்த வி‌ஷயத்தையும் மக்களுக்கு எடுத்து சொல்ல கூடாது என எதிர்கட்சிகள் கூறி கங்கனம் கட்டி வருகின்றனர். தமிழகத்தில் நல்லது செய்தால் கூட நன்றி சொல்ல கூடாது என்ற சுயநலத்துடன் உள்ளனர். தமிழக நலன் பயக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டத்தில் நன்றி தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Label