OUR CLIENTS
சிப்காட் தொழிற்சாலைக்கு 3ம் நிலை சுத்திகரிப்பு நீர் கிடைப்பது எப்போது?
சிப்காட் தொழிற்சாலைக்கு 3ம் நிலை சுத்திகரிப்பு நீர் கிடைப்பது எப்போது? Posted on 26-Dec-2018 சிப்காட் தொழிற்சாலைக்கு 3ம் நிலை  சுத்திகரிப்பு நீர் கிடைப்பது எப்போது?

ஸ்ரீபெரும்புதூர், டிச.26-

சென்னை, கோயம்பேட்டில் இருந்து, ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நீர் வழங்கும் திட்டப் பணிகள் மந்தகதியில் நடக்கின்றன. இதனால் கோடைக்காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரி நீர் சென்னை மக்களுக்கு கூடுதலாக வினியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப் பாக்கம், சுங்குவார்சத்திரம், வல்லம், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளது. இங்குள்ள 1,000க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகளில் பல்லாயிரக் கணக்கான தொழி லாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த தொழிற்சாலையின் உற்பத்தி மற்றும் குடிநீர் தேவைக்காக சென்னை குடிநீர் வாரியம் சார்பில் செம்பரம்பாக்கம் ஏரி நீர், நாளொன்றுக்கு 2.5 கோடி லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் கோடைக் காலத்தில் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கோயம்பேடு மற்றும் கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து எதிர்மறை சவ்வூடு பரவுதல் முறையில் வடிகட்டப்படும் மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர், சிப்காட் தொழிற்சாலைகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. இத்திட்டம் முடிவடைந்தால் செம்பரம் பாக்கம் ஏரியில் இருந்து சிப்காட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும் நீர் முற்றிலும் நிறுத்தப்படும்.
இதனால் கோடைக் காலத்தில் சென்னை மக்களுக்கு கூடுதலாக செம்பரம்பாக்கம் ஏரி நீரை வினியோகிக்க முடியும். இதற்காக 396 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து போரூர், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் வழியாக ஒரகடம் வரை 68 கி.மீ.,க்கு நிலத்தில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய பணி இந்தாண்டு டிசம்பர் மாதம் முடிக்க வேண்டும் என காலம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் குழாய் அமைக்கும் பணிகள் மந்த கதியில் நடக்கின்றன.இந்தாண்டு பருவ மழை போதியளவு பெய்யா ததால் செம்பரம்பாக்கம் ஏரி வறண்டுள்ளது.
இந்நிலையில் சுத்திகரிப்பு திட்டத்தை விரைந்து முடித்தால் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் நீரை சென்னைக்கு வழங்கலாம். இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை தடுக்கலாம். இதுகுறித்து சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 70 சதவீத பணிகள் நிறைவு பெற்று விட்டன. வரும் ஏப்ரல் மாதம் பணிகள் நிறைவடையும் என்றார். 
இந்த திட்டம் செயல் பாட்டிற்கு வந்தால் சென்னை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர், நாளொன்றுக்கு 4.5 கோடி லிட்டர், சிப்காட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்க முடியும். இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சிப்காட் பகுதிக்கு தினமும் அனுப்பப்படும் 2.5 கோடி லிட்டர் நீர் நிறுத்தப்பட்டு அந்த நீரை, சென்னை மக்களுக்கு கூடுதலாக வினியோகம் செய்ய முடியும். கழிவு நீரை சுத்திகரித்து சிப்காட்டிற்கு அனுப்புவதால், கூவம் ஆற்றில் விடப்படும் கழிவு நீரின் அளவு குறையும். வெளிநாடுகளில் பயன்பாடுகழிவு நீரை மூன்றாம் நிலை சுத்திகரிப்பு செய்தால் குடிநீராக பயன்படுத்த முடியும் என்பது சில வெளிநாடுகளில் பின்பற்றப் படும். மறுபயன்பாட்டு குடிநீர் தொழில்நுட்பம். சிங்கப்பூரில் இத்தகைய கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் அல்லது வீட்டு பயன்பாட்டு நீராக பயன்படுத்தப்படுகிறது.

Label