OUR CLIENTS
மண்டல, மகரவிளக்கு காலங்களில் சபரிமலைக்கு பெண்கள் வரவேண்டாம் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கோரிக்கை
மண்டல, மகரவிளக்கு காலங்களில் சபரிமலைக்கு பெண்கள் வரவேண்டாம் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கோரிக்கை Posted on 26-Dec-2018 மண்டல, மகரவிளக்கு காலங்களில் சபரிமலைக்கு பெண்கள் வரவேண்டாம் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கோரிக்கை

திருவனந்தபுரம், டிச.26-

சபரிமலைக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் பெண்கள் வரவேண்டாம் என தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறி உள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகளும், அய்யப்ப பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்திருப்பதால், அதை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளர் உள்பட 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பக்தர்களின் எதிர்ப்பால் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.
சென்னையில் இயங்கி வரும் 'மனிதி' அமைப்பை சேர்ந்த 11 பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். பம்பையில் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், மேலும் 2 பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். கேரள மாநிலம் கோயிலாண்டியை சேர்ந்த பிந்து, மலப்புரத்தை சேர்ந்த கங்கா துர்கா ஆகியோர் பம்பையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மலை ஏறத் தொடங்கினர். தொடர்ந்து மலை ஏறி, மரக்கூட்டம் என்ற இடத்தை அடைந்தபோது, 2 பெண்களையும் ஏராளமான பக்தர்கள் முற்றுகையிட்டு வழிமறித்தனர்.
அதே சமயத்தில், இந்த நிலைமை குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம்  போர்டு தலைவர் ஏ.பத்மகுமார், முதல்வர் பினராயி விஜயனிடமும்,  போலீஸ் டி.ஜி.பி.யிடமும் தொலைபேசியில் பேசினார். பக்தர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அவர் கூறினார்.
இதையடுத்து, அந்த 2 பெண்களையும் கைது செய்யுங்கள் அல்லது திருப்பி அனுப்புங்கள் என்று போலீசாருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தது. இதை அப்பெண்களிடம் போலீசார் தெரிவித்தபோது, அவர்கள் சன்னிதானத்துக்கு செல்வதில் பிடிவாதமாக இருந்தனர். இதனால் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் திருவிதாங்கூர்  தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறி இருப்பதாவது:-
சபரிமலைக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், இந்த காலங்களில் பெண்கள் வர வேண்டாம். சபரிமலைக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் பெண்கள் வரவேண்டாம். மண்டல மற்றும் மகரவிளக்கு காலம் முடிந்த பின்னர் அரசு மற்றும் நீதிமன்றம் மூலம் இதற்கான தீர்வை எடுக்கலாம்  என கூறினார்.

Label