OUR CLIENTS
3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய வீரர் புஜாரா சதம், விராட் கோலி அரை சதம்
3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய வீரர் புஜாரா சதம், விராட் கோலி அரை சதம் Posted on 27-Dec-2018 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய வீரர் புஜாரா சதம், விராட் கோலி அரை சதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா சதம் அடித்து அசத்தினார். 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஹனுமா விஹாரி-மயங்க் அகர்வால் கூட்டணி களம் கண்டது. இதில் விஹாரி 8 ரன்களுக்கும், சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக களம் கண்ட இந்திய வீரர் மயங்க் அகர்வால் 76 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 89 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து இருந்தது. புஜாரா 68 ரன்களுடனும், விராட் கோலி 47 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்று 2-ஆவது நாள் ஆட்டத்தை புஜாரா - விராட் கோலி ஜோடி தொடர்ந்தது. அதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 17-ஆவது சதத்தை அடித்தார். 
மறுபுறம் கோலியும் அரை சதம் கடந்தார். 2-ஆவது நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 103 ரன்களுடனும், கோலி 69 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். எனினும் உணவு இடைவேளைக்குப் பிறகு இந்த ஜோடி நிலைக்கவில்லை. விராட் கோலி 82 ரன்களுக்கும், புஜாரா 106 ரன்களுக்கும் தங்களது விக்கெட்டை அடுத்தடுத்து பறிகொடுத்தனர். இதைத்தொடர்ந்து ரஹானே - ரோகித் சர்மா களமிறங்கி விளையாடி வருகின்றனர். 
தற்போது வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 5 ரன்களுடனும், ரோகி சர்மா ரன் எதுவும் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். 

Label