OUR CLIENTS
ஜல்லிக்கட்டுக்கு தடை பெற "பீட்டா' அமைப்பினர் மீண்டும் முயற்சி:இயக்குநர் கெளதமன்
ஜல்லிக்கட்டுக்கு தடை பெற "பீட்டா' அமைப்பினர் மீண்டும் முயற்சி:இயக்குநர் கெளதமன் Posted on 27-Dec-2018 ஜல்லிக்கட்டுக்கு தடை பெற

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை பெற "பீட்டா' அமைப்பினர் மீண்டும் முயற்சித்து வருவதாக திரைப்பட இயக்குநர் வ.கெளதமன் தெரிவித்தார்.  
மதுரையிலிருந்து புதன்கிழமை சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  "பீட்டா' என்ற பன்னாட்டு அமைப்பு ஆதி தமிழினத்தை சீண்டிப் பார்க்கிறது. ஜல்லிக்கட்டு மீதான தீர்ப்பை எதிர்த்து மீண்டும் தடை வாங்க "பீட்டா' முயற்சிக்கிறது.
தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்காக சிறப்பு சட்டம் இயற்றியுள்ளதால் யாரும் தடை வாங்க முடியாது என்றார்கள். ஆனால் தற்போது அதற்கான பணிகளை "பீட்டா' செய்து வருகிறது.  மேலும் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு தற்போது வரை வாபஸ் பெறப்படவில்லை.
அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழக்குகளை வாபஸ் பெறுவதாக கூறினார். ஆனால் இரண்டு வருடங்களாகியும் வழக்குகள் வாபஸ் பெறப்படவில்லை.   தற்போதாவது வாபஸ் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் இதற்காக தனியாக போராட்டம் நடத்த வேண்டியது வரும் என்றார்.

Label