OUR CLIENTS
"கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு விரைவில் கவிழும்': கே.எஸ்.ஈஸ்வரப்பா
"கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு விரைவில் கவிழும்': கே.எஸ்.ஈஸ்வரப்பா Posted on 27-Dec-2018

கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு வெகு விரைவில் கவிழும் என்று பாஜக முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து பாகல்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிஹோளி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக கூறியுள்ளார்.  அதுகுறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பிரச்னை தலைதூக்கியுள்ளதை மறுக்க முடியாது.  இதனால், மஜத- காங்கிரஸ் கூட்டணி வெகு விரைவில் கவிழ்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.  
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்க தேவையான பலம் இல்லாததால், நாங்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்து பணி செய்ய முடிவு செய்துள்ளோம்.  ஆனால், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்னையைப் பயன்படுத்தி,  "ஆபரேஷன் கமலா' திட்டத்தை பாஜக செயல்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறுவதில் உண்மையில்லை.
மஜத பிரமுகர் கொலை சம்பவத்தில் முதல்வர் குமாரசாமியின் பேச்சு கண்டிக்கத்தக்கது.  தனது பதவிக்கான கெளரவத்தை அவர் காக்க வேண்டும். மாநிலத்தில் இதற்கு முன்னர்  பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.   ஆனால், அதற்கு எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காத குமாரசாமி,  தற்போது தனது நண்பர் கொலை செய்யப்பட்டதும் ஆவேசமடைவது வேடிக்கையாக உள்ளது என்றார்.

Label