OUR CLIENTS
குடிக்க பணம் தராததால் பொருட்கள் நாசம்!
குடிக்க பணம் தராததால் பொருட்கள் நாசம்! Posted on 27-Dec-2018 குடிக்க பணம் தராததால் பொருட்கள் நாசம்!

பூவிருந்தவல்லி, டிச.27-

சென்னை  பெரியார் நகர் பாலசுப்ரமணியம் தெருவில் வசிப்பவர் சர்ஜன்(32). திருமணமாகாத இவர் தனது தாய், தந்தையுடன் வசித்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்க் இருப்பதாக தெரிகிறது மது அருந்த தாய் தந்தையரை விரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மது குடிக்க பணம் தராததால் ஒருவித மன உளைச்சலுடன் பிரமை பிடித்தவர் போல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த  அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளார். மேலும் உடனிருந்த தாய், தந்தையரை தாக்கியதாக தெரிகிறது. சமையலறையில் இருந்த சிலிண்டரை திறந்துவிட்டு சர்ஜன் குளியல் அறையில் சென்று தாழிட்டுக் கொண்டார். இதனால் பதட்டம் அடைந்த அவரது பெற்றோர் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். 
செம்பியம் சரக  உதவி ஆணையர் ஜி.ஹரிகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதேபோல் செம்பியம் தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு தீயணைப்பு வாகனத்தை கொண்டுவந்தனர். அவர்கள் வீட்டிற்குள் சென்று சிலிண்டரை அப்புறப்படுத்தினர். மேலும் குளியல் அறை கதவை உடைத்து பிரமை பிடித்தவர் போல் இருந்த சர்ஜனை அழைத்தனர். அடித்துக்கொண்டு சர்ஜன் தன்னைத் தானே அழித்துக் கொண்டு இறந்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அவரின் பெற்றோர்கள் ஆலோசனைப்படி  கை கால்களை கட்டி வில்லிவாக்கத்தில் உள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Label