OUR CLIENTS
பெயர் பலகையை மறைத்து ஒட்டப்படும் போஸ்டர்!
பெயர் பலகையை மறைத்து ஒட்டப்படும் போஸ்டர்! Posted on 27-Dec-2018 பெயர் பலகையை மறைத்து ஒட்டப்படும் போஸ்டர்!

காஞ்சிபுரம், டிச.27-

பெயர் பலகையை மறைத்து ஒட்டப்படும் போஸ்டர் களால் புதிதாகச் செல்லும் வாகன ஓட்டிகள் குழப்ப மடைகின்றனர்.

கிராமப் புறங்களில் சாலைச் சந்திப்புகள், ஊராட்சி எல்லைப் பகுதிகளில் பெயர் பலகைகள் வைக்கப்படுகின்றன.இவை அந்த பகுதியில் புதிதாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டியாக அமைகின்றன. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் பெயர் பலகைகளை மறைத்து திருமணம், பிறந்த நாள் வாழ்த்து மற்றும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இதனால் அந்த வழியே புதிதாகச் செல்லும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் குழப்பம் அடைகின்றனர்.எனவே பெயர் பலகை மீது போஸ்டர் ஒட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Label