OUR CLIENTS
குட்கா ஊழலில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளை விசாரிக்கிறது சி.பி.ஐ.,!
குட்கா ஊழலில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளை விசாரிக்கிறது சி.பி.ஐ.,! Posted on 27-Dec-2018 குட்கா ஊழலில் தொடர்புடைய போலீஸ்  அதிகாரிகளை விசாரிக்கிறது சி.பி.ஐ.,!

பெரம்பூர், டிச.27-

சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் செங்குன்றம் அருகே சட்ட விரோதமாக குட்கா ஆலை மற்றும் குடோன் நடத்தி வந்தனர்.

அவர்களின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அவர்களிடம் இருந்து ரகசிய டைரி ஒன்றை கைப்பற்றினர்.அதில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், 
டி.ஜி.பி., &டி.கே.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர், ரமணா, சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட, ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டதற்கான குறிப்புகள் இருந்தன.
இதுதொடர்பாக மாதவ ராவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளார்.இதையடுத்து இவ்வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். அதில் திருப்தி இல்லை என்பதால் சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. டில்லியைச் சேர்ந்த சி.பி.ஐ., அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தினர். பின் மாதவ ராவ் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். சில தினங்களுக்கு முன் விஜயபாஸ்கர், ரமணா மற்றும் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆகியோரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் குட்கா ஊழல் நடந்த 2016ல் இருந்து சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றிய கூடுதல், இணை, துணை, உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களாக இருந்தோர் என 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரிக்க சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக ஜனவரியில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள், டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடக்க உள்ளது. இதற்காக கேள்விகள் தயாரிக்கும் பணியில், சி.பி.ஐ., அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் காவல் துறையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Label