OUR CLIENTS
அங்கன்வாடிகளில் ஆதார் மையங்கள் விரைவில் திறப்பு பொதுமக்களின் சிரமத்தை குறைக்க நடவடிக்கை!
அங்கன்வாடிகளில் ஆதார் மையங்கள் விரைவில் திறப்பு பொதுமக்களின் சிரமத்தை குறைக்க நடவடிக்கை! Posted on 27-Dec-2018 அங்கன்வாடிகளில் ஆதார் மையங்கள் விரைவில் திறப்பு பொதுமக்களின் சிரமத்தை குறைக்க நடவடிக்கை!

புதுச்சேரி, டிச.27-

பிறப்பில் ஆரம்பித்து இறக்கும் வரை ஆதார் கார்டு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் 12 இலக்க அடையாள எண் கொண்ட ஆதார் கார்டு, மிக முக்கிய ஆவணமாக மாறி விட்டது.ஒவ்வொரு நாளும் ஏராளமான குழந்தைகள் பிறப்பதால் ஆதார் கார்டு வழங்கும் பணி தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. இன்னொரு பக்கம் விடுபட்டவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்துவ அடையாள ஆணைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 
புதுச்சேரியை பொறுத்தவரை சாரத்தில் உள்ள பழைய கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை அலுவலகத்தில் தனித்துவ அடையாள ஆணைய அலுவலகம் அமைந்துள்ளது.இங்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப் பித்தால் புதிய ஆதார் கார்டு பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பெயரில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வது, முகவரி மாற்றம், ஆதார் கார்டு புதுப்பிப்பு போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவ மனை, உழவர்கரை, வில்லியனூர் மற்றும் பாகூர் தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களிலும் ஆதார் மையம் செயல்படுகிறது.மேலும் தபால் நிலையங்கள், பாங்க்குகளிலும் ஆதார் மையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவற்றை தவிர மாநிலம் முழுவதும் 34 இடங்களில் ஆதார் கார்டு மையங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் எளிதாக ஆதார் கார்டு கிடைப் பதற்கும், திருத்தங்கள் செய்வதற்கும் குறிப்பிட்ட அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளில் ஆதார் மையங்களை விரைவில் திறப்பதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக அங்கன் வாடிகளுக்கு தேவையான கம்ப்யூட்டர்கள் மற்றும் கருவிகள் வாங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. ஒரு பேட்ஜ் ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியை பொறுத்த வரை பெரும்பாலான மக்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டு விட்டது. இருந்தபோதும் சில தொழில்நுட்ப காரணங்களால் 95 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அரசின் 42 திட்டங்களின் உதவிகளை பெறுவதற்கு 99 சதவீதம் பேர் தங்களது ஆதார் விபரங்களை சமர்ப்பித்துள்ளனர். நேரடி பணப் பரிமாற்றம் செய்யப்படும் திட்டங்களில் 99.79 சதவீதம் பேர் ஆதார் எண்ணை சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Label