OUR CLIENTS
தச்சை வேதிக் பள்ளியில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு!
தச்சை வேதிக் பள்ளியில் சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Posted on 27-Dec-2018 தச்சை வேதிக் பள்ளியில்  சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு!

திருநெல்வேலி, டிச.27-

தச்சை வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் 14ம் ஆண்டு சுனாமி நினை தினம் அனுசரிக்கப்பட்டது.

தமிழகத்தை சுனாமி தாக்கி 14 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் மக்கள் இன்றளவும் மனதளவில் அதன் அச்சத்திலிருந்து மீளாதவர்களாகவே உள்ளனர். இந்த கோர நிகழ்வுக்குப்பின் பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், உடன் பிறந்தோரை இழந்த சகோதர, சகோதரிகள் என பலருக்கும் மனதளவில் சுனாமி ஏற்படுத்திய வடு இன்றளவும் மறையவில்லை. சுனாமி பேரலையால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தச்சை வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி மாணவியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தி தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் செந்தில் பிரகாஷ், இயக்குநர்  திலகவதி, முதல்வர் சோமசுந்தரி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Label