OUR CLIENTS
அம்மனுக்கு மாதா அலங்காரம் இந்து அமைப்பினர் போராட்டம்!
அம்மனுக்கு மாதா அலங்காரம் இந்து அமைப்பினர் போராட்டம்! Posted on 27-Dec-2018 அம்மனுக்கு மாதா அலங்காரம் இந்து அமைப்பினர் போராட்டம்!

பண்ருட்டி, டிச.27-

பண்ருட்டியில் அம்மன் சிலைக்கு மேரி மாதா அலங்காரம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் வீதியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆதிபராசக்தி உள்ளிட்ட சுவாமி சிலைகள் உள்ளன. இக்கோவிலில் நேற்றுமுன்தினம் காலை மூலவர் அம்மன் மேரி மாதா அலங்காரத்தில் ஒரு கையில் சிலுவை ஏந்திய நிலையிலும், மறு கையில் குழந்தை இயேசுவை வைத்திருப்பது போன்றும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதையறிந்த பா.ஜ., இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷித் அமைப்பினர் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு சித்தர் பீட அமைப்பை கண்டித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி., சுந்தரவடிவேல் தலைமையில் போலீசார் வந்து மாதா உருவ பொம்மைகள், சிலுவை டாலர் உள்ளிட்டவைகளை அகற்றினர். அம்மனுக்கு மேரி மாதா அலங்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து அமைப்பினர் கோவிலை முற்றுகையிட்டனர்.புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து கலைந்து சென்றனர்.

Label