OUR CLIENTS
ஆபத்தோடு விளையாட்டு அத்துமீறும் சுற்றுலாவினர்!
ஆபத்தோடு விளையாட்டு அத்துமீறும் சுற்றுலாவினர்! Posted on 27-Dec-2018 ஆபத்தோடு விளையாட்டு அத்துமீறும் சுற்றுலாவினர்!

 குன்னூர், டிச.27-

குன்னூர் & மேட்டுப்பாளையம் சாலையோரம் அபாயகரமான நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியர் அத்துமீறுவது அதிகரித்து வருகிறது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் & மேட்டுப்பாளையம் சாலையோரம் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சுற்றுலாப் பயணியர் பலர் ஆபத்தை உணராமல் இங்கு குளிக்கவும் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர். பர்லியார் & புதுக்காடு இடையே உள்ள நீர்வீழ்ச்சி மிகவும் அபாயகரமாக கருதப்படுவதால் இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது. இருந்தும் அத்துமீறல் தொடர்கிறது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்தி தமிழில் இருக்கும் எச்சரிக்கை அறிவிப்போடு ஆங்கிலத்திலும் எழுதி வைத்தால் பலர் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

Label