OUR CLIENTS
காவி மண் தாமரையை மலர வைக்கும்! தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
காவி மண் தாமரையை மலர வைக்கும்! தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி Posted on 27-Dec-2018 காவி மண் தாமரையை மலர வைக்கும்! தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

திருப்பூர், டிச.27-

காவி மண் தாமரையை மலர வைக்கும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருப்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திருச்சியில் கருஞ்சட்டை மாநாடு நடந்தது. அதில் பேசிய சுப.வீரபாண்டியன் கரிசல் மண்ணில் கரும்பு முளைக்காது, தமிழகத்தில் தாமரை எந்நாளும் மலராது என்று பேசினார்.
இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் திருப்பூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிரிவினை பேசுபவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை, இது காவி மண். காவி மண்ணை அழித்து கரிசல் மண் என்றால் அதனை அப்புறப்படுத்த வேண்டும். காவி மண் தாமரையை மலர வைக்கும்.
கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து கூறும் ஸ்டாலின், ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை?. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக வலுப்பெறாது, ஸ்டாலினின் நகர்வு தவறானது. இவ்வாறு தமிழிசை  கூறினார்.

Label