OUR CLIENTS
வங்கிகள், காப்புரிமை நிறுவனங்களின் தணிக்கை அறிக்கைகளை மத்திய புலனாய்வு ஆணையம் ஆய்வு
வங்கிகள், காப்புரிமை நிறுவனங்களின் தணிக்கை அறிக்கைகளை மத்திய புலனாய்வு ஆணையம் ஆய்வு Posted on 27-Dec-2018 வங்கிகள், காப்புரிமை நிறுவனங்களின் தணிக்கை அறிக்கைகளை மத்திய புலனாய்வு ஆணையம் ஆய்வு

புதுடெல்லி, டிச.27-

பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்புரிமை நிறுவனங்களில் நடைபெறும் மோசடிகளை கண்டறியும் முயற்சியாக அதன் தணிக்கை அறிக்கைகளை சிவிசி எனப்படும் மத்திய புலனாய்வு ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

கடந்த 2015-16 மற்றும் 2017-18ம் ஆண்டுகளில் வங்கிகள் மற்றும் காப்புரிமை நிறுவனங்கள் தொடர்பாக பல முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன. அவை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் மக்களவை கூட்டத்தில் நிதி அமைச்சகம் அளித்த பதில் ஒன்றில் வங்கிகள் மற்றும் காப்புரிமை நிறுவனங்களில் நடக்கும் மோசடிகள் குறித்து 2015-16ம் ஆண்டில் 7,482 புகார்களும் 2016-17ம் ஆண்டில் 7,794 புகார்களும் 2017-18ம் ஆண்டில் 8,802 புகார்களும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வங்கிகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. இதுபோன்ற மோசடிகள் தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அனைத்து வங்கிகளுக்கும் அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் வங்கிகள் மற்றும் காப்புரிமை நிறுவனங்கள் தொடர்பாக எழுந்துள்ள மோசடி புகார்கள் வாராக்கடன் பிரச்சனைகள் பற்றி கண்டறிய மத்திய புலனாய்வு ஆணையம் அனைத்து தணிக்கை அறிக்கைகளையும் ஆய்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவிசி ஆணையர் டி.எம் பாசின் கூறுகையில் அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்புரிமை நிறுவனங்களின் தலைமை புலனாய்வு அதிகாரிகளின் உதவியுடன் மத்திய சட்ட அறிக்கைகள், தணிக்கையாளர்களின் அறிக்கைகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
''அனைத்து தணிக்கை அறிக்கைகளும் சிவிசியில் பரிசீலிக்கப்பட்டு பின் கால நடைமுறைக்கு ஏற்ற சரியான செயல் திட்டம் பரிந்துரைக்கப்படும்'' என்று டி.எம் பாசின் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் மாதம் நகை, விமானத்துறை தொடர்பான 100 வங்கி முறைகேடுகள் குறித்து சிவிசி ஆய்வு நடத்தி தன் அறிக்கையை ரிசர்வ் வங்கி, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளிடம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Label