OUR CLIENTS
வேலூரில் பயங்கரம்: ஊருக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் 6 பேர் காயம்
வேலூரில் பயங்கரம்: ஊருக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் 6 பேர் காயம் Posted on 27-Dec-2018 வேலூரில் பயங்கரம்: ஊருக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் 6 பேர் காயம்

வேலூர்:-

 வேலூரில் சிக்கனாங்குப்பம் பகுதியில் வனப்பகுதிக்குள் இருந்து ஊருக்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த பொதுமக்களை தாக்கியதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை அங்கிருந்த கரும்புத் தோட்டத்தில் புகுந்தது. இது பற்றி தகவல் அறிந்த மக்கள் அங்கு குவிந்திருந்தனர். 
அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் சிறுத்தை பொதுமக்களை நோக்கி பாய்ந்தது. சிறுத்தையைப் பார்த்து ஓடிய மக்களை துரத்திச் சென்று தாக்கியதில் 6 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, வனத்துறையினர் விரைந்து வந்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Label