OUR CLIENTS
தமிழக மீனவர்கள் 3000 பேர் கடலில் இருந்து விரட்டியடிப்பு-வலைகளையும் அறுத்து எறிந்தது இலங்கை கடற்படை
தமிழக மீனவர்கள் 3000 பேர் கடலில் இருந்து விரட்டியடிப்பு-வலைகளையும் அறுத்து எறிந்தது இலங்கை கடற்படை Posted on 27-Dec-2018 தமிழக மீனவர்கள் 3000 பேர் கடலில் இருந்து விரட்டியடிப்பு-வலைகளையும் அறுத்து எறிந்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்,

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3000 பேரை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர் என இராமேஸ்வரம் மீனவர்களின் சங்க தலைவர்  பி. சேசுராஜா இன்று தெரிவித்தார்.

ராமேஸ்வரத்தில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 3000 மீனவர்கள் சுமார் 500 விசைப்படகுகளில் நேற்று இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது  அங்கு 20 படகுகளில் வந்த  இலங்கை கடற்படையினர் இங்கு மீன்பிடிக்கக்கூடாது எனக் கூறி மீனவர்களை எச்சரித்தனர். தொடர்ந்து மீனவர்களின் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் அறுத்து எறிந்தனர். மேலும் படகுகளையும் சேதப்படுத்தினர்.
மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் கரை திரும்பினர் என மீனவர்களின் சங்க தலைவர் பி. சேசுராஜா தெரிவித்தார். இதேபோல் டிசம்பர் 11ம் தேதி 3000 மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Label