OUR CLIENTS
மெல்போர்ன் டெஸ்ட்: 4 விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்
மெல்போர்ன் டெஸ்ட்: 4 விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம் Posted on 28-Dec-2018 மெல்போர்ன் டெஸ்ட்: 4 விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, புஜாராவின் (106 ரன்கள்) அபார சதம், விராட் கோலியின் 82 ரன்கள், ரோகித் சர்மாவின் 63 ரன்கள் ஆகியவற்றின் உதவியால் இந்தியா 400 ரன்களை எடுத்தது. 169.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ‘டிக்ளேர்’ செய்தது.
ஆஸி. தரப்பில் பேட் கம்மின்ஸ் அபாரமாக பந்துவீசி 3-72 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டார்க் 2-87, ஹேஸல்வுட் 1-86, லயன் 1-110 விக்கெட்டைவீழ்த்தினர்.  பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி.அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்களை எடுத்திருந்தது. மார்கஸ் ஹாரிஸ் 5, ஆரோன் பின்ச் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 435 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா இன்று தனது 3-ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. ஆனால் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். 
22 ரன்கள் சேர்த்து இருந்த மார்கஸ் ஹாரிஸ் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் பிஞ்ச் 8 ரன்களில் இஷாந்த் ஷர்மா பந்தில், மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3-ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய உஸ்மான் காவ்ஜாவும் நீடிக்கவில்லை. 21 ரன்களில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஷான் மார்ஷ் 61 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், பும்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். ஆஸ்திரேலிய அணி 3ஆவது நாள் ஆட்ட நேர உணவு இடைவேளை வரை 33 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. டிராவிஸ் ஹெட் 18 ரன்களுடன் களத்தில் உள்ளார். 
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட ஆஸ்திரேலிய அணி இன்னும் 354 ரன்கள் பின் தங்கியுள்ளது. இதனால், தற்போதைய சூழலில், இந்திய அணியின் கை வலுவாக ஓங்கியுள்ளது. 

Label